Posted by : Author Sunday, 23 August 2015


இன்றைய நாகரீக உலகில் மாரடைப்பும், புற்றுநோயும் மனிதனின் இறப்பிற்கு முக்கிய காரணங்களாக உள்ளன.
நம் உடலில் முதிர்ந்த செல்கள் அழிவதும், புதிய செல்கள் தோன்றி அதை புதுப்பித்தலும் முறையான கட்டுப்பாட்டுடன் நடந்து கொண்டே இருக்கின்றன.

சில காரணங்களினால் இந்தக் கட்டுப்பாடு மாறி புதிய வகையான செல்கள் உருவாகி அவை மிக வேகமாக பெருகி உறுப்புகளில் கட்டியாக உண்டாகிறது. இதையே புற்று நோய் என்கிறோம்.

கருப்பை புற்றுநோய், வாய்புற்றுநோய், மார்பக புற்றுநோய், எலும்பு புற்றுநோய் என பல்வேறு புற்றுநோய்களின் தாக்கத்திற்கு மனிதன் ஆளாகிறான்.உடலின் உறுப்புகளில் புற்றுநோய்களில் ஏற்படுகின்றன.

இவற்றில் எலும்பு புற்றுநோய் பற்றி பார்ப்போம்,

எலும்பு புற்றுநோய்(Bone cancer)

எலும்பில் உருவாகி மற்ற இடங்களுக்குப் பரவும் புற்றுநோய், முதல் நிலை எலும்புப் புற்றுநோய் (Primary Bone Cancer) என்று அழைக்கப்படுகிறது.

உடலின் வேறு பாகத்தில் புற்று உருவாகி அது எலும்புக்கும் பரவும். இதை இரண்டாம் நிலை(Secondary Bone cancer) எலும்புப் புற்றுநோய் என்கிறோம்.

இருவகைகள்

1.பரவும் தன்மை புற்றுநோய் (Malignant Cancer)

2.பரவாத தன்மையற்ற புற்றுநோய் (Benign Cancer)

பரவாத தன்மை புற்றுநோயால் ஆபத்து ஏற்படுவதில்லை, சிகிச்சை எடுத்தால் குணமாகிவிடும், ஆனால் பரவும் தன்மையுள்ள புற்றுநோய்க்கு சிகிச்சை எடுத்தாலும் ஆபத்து உண்டு.

எந்தெந்த உறுப்புகளில் ஏற்படுகின்றன?

கை மணிக்கட்டு, கால் முட்டி, தோள்பட்டை போன்ற இடங்களில் எலும்பு புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

அறிகுறிகள்

பொதுவாக 10 வயது முதல் 30 வயதுள்ளோருக்கு முதல்நிலை புற்றுநோய் ஏற்பட வாய்ப்புள்ளது.

புற்றுநோய் ஏற்பட்ட பகுதியில், வீக்கம், வலி மற்றும் அப்பகுதியை அசைக்க முடியாமல் இருப்பது.

உடல் பலவீனம், இளம் வயதில் மூட்டு வலி வந்தால் அலட்சியமாக இருக்காமல் மருத்துவருடன் ஆலோசிப்பது நல்லது.

பெரியவர்களுக்கு ஏற்படுகின்ற சார்கோமா வகை எலும்பு புற்றுநோய் கடுமையாக பரவும் வகையைச் சார்ந்தது.

சிகிச்சைகள்

மூன்று வகை சிகிச்சைகள் உள்ளன.

1. ஹீமோதெரப்பி (Chemotherapy) மருந்து கொடுப்பது.

2. ரேடியோதெரபி (Radiotherapy) கதிரியக்கச் சிகிச்சை மூலம் புற்று செல்களை அழிப்பது ஆகியவை முதல் கட்ட சிகிச்சைகள்.

3.மூன்றாவதாக அறுவைச் சிகிச்சை. அறுவைச் சிகிச்சை மூலம் புற்றுநோய் பரவியுள்ள இடத்தை முற்றிலுமாக அகற்றி விடுவது.

அதாவது, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலும்பை அகற்றிவிட்டு செயற்கை எலும்பு பொருத்திவிடலாம், இல்லையெனில் நோயாளி ஊனமாகும் நிலைக்கு ஆளாகிவிடலாம்.

உணவு முறைகள்

உணவு முறையில் போதுமான கால்சியம் மற்றும் வைட்டமின் ஈ இருக்க வேண்டும்.

* நாள்தோறும் உடற்பயிற்சி (வேகமாக நடத்தல், ஏரோபிக்ஸ், டென்னிஸ்)

* மது மற்றும் புகை பிடித்தலைத் தவிர்த்தல்.

* விட்டமின் டி உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டும்.

* விட்டமின் டி-யில் இருவகைகள் ஈ2, ஈ3 ஆகியன உள்ளன.

* ஈ2 – தாவரங்களின் மூலம் (பழங்கள், காய்கறி, கீரைகள் மூலம்) கிடைக்கிறது.

* வைட்டமின் ஈ3 – சூரிய ஒளியின் மூலம் தோலில் இரசாயன மாற்றத்தால் கிடைக்கிறது.

விட்டமின் ஈ யின் பயன்கள்

எலும்புகளின் வலிமை

* எலும்பு வளர்ச்சி

* தசைகளுக்கு உறுதி

* இரத்த அழுத்தத்தைக் குறைத்தல்

* எலும்பு மூட்டுகள் உறுதி

* தோலுக்கு எதிர்ப்பாற்றல்

* சிறுநீரகத்தின் செயல்பாடுகளைச் சீராக்குதல்

போன்ற பல்வேறு பலன்கள் விட்டமின் ஈ மூலம் கிடைக்கிறது.

வைட்டமின் ‘ஈ’ கிடைக்கும் உணவுகள்:

பால், மீன், முட்டை, எண்ணெய், மாமிசம், வெண்ணெய், காய்கறிகள், கீரைகள், பருப்பு வகைகள், கொட்டைகள் – போன்றவற்றில் அதிக வைட்டமின் ஈ கிடைக்கிறது.

விட்டமின் ஈ குறைபாட்டல், எலும்பு, பல், நரம்புகள் பாதிக்கப்படும். இதனால் வயது வந்தவர்களுக்கு எளிதில் வயோதிகம் ஏற்படும்.

குழந்தைகளுக்கு தலை எலும்பு வளர்ச்சி குறைந்து தலையின் முன்பாகம் பெரிதாக இருக்கும். கைகால் மூட்டுகள் புடைத்து இருக்கும். நெஞ்சு எலும்பு கூடாக இருக்கும். முதுகு கூன் விழும்.


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -