Posted by : Author
Sunday, 23 August 2015
மனிதர்களில் சிலருக்கு அழுவது பிடிக்காது, ஆனால் பலரோ எதற்கெடுத்தாலும் அழுவதை பழக்கமாக கொண்டிருப்பார்கள்.
ஆனால், இந்த அழுகை கூட மனிதர்களுக்கு சில ஆரோக்கிய நன்மைகளை கொடுக்கிறது.
அழுவதால் என்ன நன்மை?
1.கண்களில் இருந்து கண்ணீர் வெளியாகும்போது, இமைகள் மற்றும் கண்விழிகள் சுத்தமாவதோடு மட்டுமல்லாமல் பார்வையும் தெளிவாகிறது.
2. கண்ணீரில் லைசோசோம்(Lysozyme) உள்ளதால், அது கண்ணில் இருக்கும் 90-95 % பாக்டீரியாக்களை அழிக்கிறது.
3. நாம் தோல்வியால் துவண்டிருக்கும்போது மனம்விட்டு அழுதால், மனதில் உள்ள எதிர்மறை எண்ணங்கள் கண்ணீராக வெளியேறிவிடுகிறது.
4.மனிதர்களின் மனநிலையில் தாக்கத்தை ஏற்படுத்தும் மாங்கனீஸ் சத்து அழுவதன் மூலம் குறைகிறது.
5.இரத்த அழுத்தத்தை சீராக்குகிறது.
6.கண்ணீரில் உள்ள திரவம் சருமத்தில் பட்டு நச்சுக்களை அகற்றி சருமத்தை பாதுகாக்கிறது.
7. அழுகை வரும்போது அழுதுவிடுங்கள், ஒருபோதும் அதனை அடக்கிவைக்காதீர்கள், அது உங்களுக்கு மன அழுத்தம் வருவதற்கு காரணமாகும்.