Posted by : Author
Sunday, 14 June 2015

உலக சனத்தொகையில் 95 சதவீதத்திற்கு மேற்பட்ட மக்கள் சுகாதாரப் பிரச்சினைகளுடன் வாழ்வதாக ஆய்வறிக்கையில் கண்டறியப்பட்டுள்ளது.
சனத்தொகையில் மூன்றிலொரு பங்கிற்கு மேற்பட்டவர்கள் ஐந்திற்கு மேலான நோய்களால் அவதியுறுவதாக அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
இது 188 நாடுகளில் இருந்து திரட்டிய தகவல்களின் அடிப்படையில் வரையப்பட்ட அறிக்கையாகும்.
Global Burden of Disease Study என்ற பெயரில் தொகுக்கப்பட்ட அறிக்கையின் விபரங்கள் லான்செட் சஞ்சிகையில் வெளியாகியிருக்கின்றன.
முள்ளந்தண்டு கீழ்ப்புற வலி, மன அழுத்தம், இரும்புச்சத்து பற்றாக்குறை, கழுத்து வலி போன்றவறை மக்களின் சுகாதாரத்தில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிகிறது.
Related Posts :
- Back to Home »
- மருத்துவம் »
- முள்ளந்தண்டு வலி, மன அழுத்தங்களால் மாற்றமடையும் வாழ்க்கை

