Posted by : Author Sunday, 14 June 2015






எண்ணெய்களில் கொழுப்பு அதிகம் என்பதால் அது உடல் எடையை குறைக்கும் என்று தான் எல்லோரும் நினைப்பார்கள்.
ஆனால் ஒரு சில எண்ணெய்களில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் கொழுப்பு நல்ல கொழுப்புகள் உள்ளது.

கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்ணெய்களை சமையலில் சேர்த்துக்கொள்வதன் மூலம் எடை குறைய வாய்ப்புள்ளது.

தேங்காய் எண்ணெய்


தேங்காய் எண்ணெயில் நல்ல கொழுப்புக்கள் நிறைந்திருப்பதோடு, அவை உடலில் உள்ள கொலஸ்ட்ரால் அளவை குறைக்கவும், நோய்களை தடுக்கவும், உடலின் ஆற்றலை அதிகரித்து எப்போதும் சுறுசுறுப்புடன் செயல்படவும் உதவும்.

ஆகவே எடையைக் குறைப்போர் பயமில்லாமல் தேங்காய் எண்ணெயை சமையலில் சேர்க்கலாம்.

ஆலிவ் ஆயில்


ஆலிவ் ஆயிலில் 78% மோனோசாச்சுரேட்டட் கொழுப்புக்கள்(Monounsaturated fats) மற்றும் 14% சாச்சுரேட்டட் கொழுப்புக்களும்(saturated fats) உள்ளது.

மேலும் ஆலிவ் ஆயில் இதயம் மற்றும் நீரிழிவு நோயாளிகளுக்கு நல்லது.

கனோலா ஆயில்


இதில் உடலுக்கு வேண்டிய அத்தியாவசிய ஃபேட்டி ஆசிட்டுகளான(Fatty Acids) ஒமேகா-6(Omega 6 and Omega 3) மற்றும் ஒமேகா-3 ஃபேட்டி ஆசிட்டுகளைக் கொண்டுள்ளது.

இந்த ஆசிட்டுகள் கொழுப்புக்களை கரைக்கவும், உடலை பிட்டாக வைத்துக் கொள்ளவும் உதவும்.



சூரியகாந்தி எண்ணெய்


இந்த எண்ணெயில் வைட்டமின் ஈ வளமாக நிறைந்திருப்பதோடு, அன்சாச்சுரேட்டட் கொழுப்புக்களும் நிறைந்துள்ளது. எனவே உடல் எடையைக் குறைக்க நினைப்போர், இந்த எண்ணெய்யை சமையலில் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -