Posted by : NEWMANNAR Tuesday, 3 February 2015

தினமும் மூலிகை டீ அருந்தும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள். இதனால், உடல் உள்ளுருப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து, எந்த நோய் தொற்றும் ஏற்படாமல் பாதுகாக்கும்.

மூலிகை டீ

ஆவாரம் பூ, ரோஜா, செம்பருத்தி, வாழை பூ மூன்றையும் சம அளவு எடுத்து, தனித்தனியாகத் தண்ணீரில் அலசி நன்றாக உலர்த்தவும். பிறகு மிஷினில் கொடுத்து அரைத்துக் கொண்டு, மூலிகை டீ தூளாகப் பயன்படுத்தலாம்.

ஆவாரம் பூ

ஆவாரம் பூக்களைத் தண்ணீரில் அலசிய பிறகு, தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு எலுமிச்சம் பழச்சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.

கொய்யா இலைகள்

கொய்யா இலைகளை நீரில் கொதிக்க வைத்து வெல்லம், ஏலக்காய் சேர்த்துப் பருகலாம்.

செம்பருத்தி பூ

செம்பருத்தி பூக்களின் இதழ்களைப் பிரித்துத் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு எலுமிச்சம் பழச்சாறு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.

துளசி

துளசி இலைகளைத் தண்ணீரில் போட்டு கொதிக்க விட்டு, ஏலக்காய் தட்டி போட்டு கருப்பட்டி சேர்த்து அருந்தலாம்.

கொத்தமல்லி

கொத்தமல்லி தழைகளைத் தண்ணீரில் கொதிக்க வைத்து சிறிது சுக்கு, வெல்லம் சேர்த்துக் குடிக்கலாம்.

புதினா

புதினா இலைகளை நீரில் கொதிக்க விட்டு, எலுமிச்சம் பழச்சாறு, கருப்பட்டி கலந்து குடிக்கலாம்

மூலிகை காபி

சுக்கு, மிளகு, திப்பிலி, மல்லி, சீரகம், விளாமிச்சை வேர், அஷ்வகந்தா – இவற்றைச் சம அளவு எடுத்துக் கொண்டு மிஷினில் கொடுத்து அரைத்து, காபி பொடியாகப் பயன்படுத்தலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -