Posted by : NEWMANNAR
Monday, 19 January 2015
மஞ்சள் என்றாலே மங்களகரமானது என்று பொருள், எந்த ஒரு நல்ல காரியமும் மஞ்சளுடன் தான் தொடங்கும்.
இதுதவிர மஞ்சள் என்பது மிகப்பெரிய கிருமிநாசினி, மிகச்சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
ஆனால் இதனை பயன்படுத்துவதால் பக்கவிளைவுகளும் ஏற்படும் என்றால் உங்களால் நம்பமுடிகிறதா?
* குறிப்பாக உங்களுக்கு மசாலாக்கள் அலர்ஜி என்றால் மஞ்சள் பயன்படுத்துவதை முடிந்தவரை தவிர்த்து விடுங்கள்.
* பித்தப்பையில் கற்கள் உருவாகுவதற்கு மஞ்சள் முக்கிய காரணம் என கூறப்படுகிறது.
* ஈரல் வீக்கம் மற்றும் இதர பிரச்னைகள் உள்ளவர்கள் மஞ்சளை எக்காரணம் கொண்டும் எடுத்துக் கொள்ள கூடாது.
* கர்ப்பிணிகள் தங்களுக்கு பிறக்க போகும் குழந்தை வெள்ளையாக இருக்க வேண்டும் என்பதற்காக பாலில் மஞ்சள் கலந்து குடிப்பர், இது தவறானதாகும்.
* சர்க்கரை நோய்க்கு மஞ்சள் நன்மை பயக்கும் என்றாலும், அதிக அளவில் எடுத்துக் கொள்வது தீங்கை விளைவிக்கும்.
* ஆண்கள் அதிகளவு மஞ்சளை எடுத்துக் கொள்வது நல்லதல்ல, இதனால் மலட்டுத்தன்மை ஏற்படலாம் என ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றது.
* இரத்த சோகை உள்ளவர்கள், அறுவை சிகிச்சை செய்து கொண்டவர்கள் மஞ்சளை தவிர்ப்பது நலம்.
Related Posts :
- Back to Home »
- மூலிகை மருத்துவம் »
- மஞ்சள் பயன்படுத்துவதால் பக்கவிளைவுகளா?

