Posted by : NEWMANNAR Monday, 19 January 2015

முள்ளங்கி நாம் சாதாரணமாக உணவாக பயன்படுத்துகிற ஒன்றுதான். எனினும் அதனுள் அடங்கியுள்ள மிகச்சிறந்த மருத்துவ குணங்களை நாம் அறியவில்லை.
முள்ளங்கியில் மஞ்சள் முள்ளங்கி, சுவற்று முள்ளங்கி, சதுர முள்ளங்கி, வனமுள்ளங்கி, கெம்பு முள்ளங்கி என வேறு சில வகை முள்ளங்கிகளும் உண்டு.

* முள்ளங்கி சாற்றோடு சர்க்கரை சேர்த்து உள்ளுக்கு கொடுப்பதால் குத்திருமல் குணமாகும். மேலும் பலவித ஈரல் நோய்களுக்கும் இது பலன் தரும்.

* முள்ளங்கியைப் பயிர் செய்து இரண்டு மூன்று இலைகள் வந்தவுடன் அந்த இலைகளில் ஒரு பிடி அளவு எடுத்து 2 முதல் 4 கிராம் அளவு சாதாரண சோற்று உப்பு சேர்த்து காலை, மாலை என 2 வேளையும் சாப்பிட்டு வர வெள்ளை வெட்டை என்கிற சிறுநீக மற்றும் பால்வினை நோய்களால் உண்டாகும் நீரடைப்பு நீங்கும். மலமும் வெளியேறும்.

* 50 முதல் 100 கிராம் வரையில் முள்ளங்கியை எடுத்து சாறு பிழிந்து குடித்து சிறுநீர் வர சிறுநீர் தாரளமாய் இறங்கும்.

* கிழங்கைப் பச்சையாகவோ, சமைத்தோ உண்பதால் சுவையின்மை நீங்கிப் பசி உண்டாகும். உணவையும் சீரணமாக்கும்.

* காலை, மாலை என இருவேளைகளும் முள்ளங்கி சாறு செய்து பருகுவதால் மூலநோய்கள் குணமாகும்.

* இளம் முள்ளங்கி கீரையின் சாற்றை எடுத்து மெல்லிய துணியால் வடிகட்டி அதில் போதிய சர்க்கரை சேர்த்து அருந்திவர மஞ்சள் காமாலை குணமாகும்.

* ஒரு தேக்கரண்டி முள்ளங்கி கிழங்குச் சாற்றோடு சம அளவு தேனும், உப்பும் சேர்த்து சாப்பிட இருமல், நெஞ்சக கோளாறுகள், இதய வலி, வயிற்று உப்பிசம், தொண்டைப்புண், தொண்டைக் கட்டு ஆகியன குணமாகும்.

* முள்ளங்கி விதையை நன்றாக இடித்த காடி சேர்த்து குழைத்தப் பசையாக்கி வெண்புள்ளிகளின் மீது தடவி வர தோலின் நிறம் மாறி வரும்.



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -