Posted by : NEWMANNAR Saturday, 24 January 2015

மலேரியா ஒட்டுண்ணிகளை மிகவும் சக்தி வாய்ந்த சிகிச்சையினால் கூட எப்படி கட்டுப்படவைக்க முடியவில்லை என்று ஆராய்ந்த விஞ்ஞானிகள் இதற்குக் காரணமான உருமாற்றத்தைத் தாங்கள் கண்டறிந்துள்ளதாகக் கூறுகின்றனர்.

‘நேச்சர் ஜெனடிக்ஸ்’ என்ற சஞ்சிகையில் பிரசுரமாகியிருக்கும் ஒரு ஆய்வுக் கட்டுரையில், இந்த ஆராய்ச்சியாளர்கள், விரைந்து பரிணாம வளர்ச்சி கண்டுவரும் இந்த ஒட்டுண்ணிகளைக் கட்டுப்படுத்த 1950களிலிருந்தே தொடர்ந்து ஒன்று மாற்றி ஒன்று பயன்படுத்தப்பட்டுவரும் மருந்துகள் யாவும் பயனற்றதாகிவிட்டன என்று கூறுகிறார்கள்.

ஒவ்வொரு முறையும், இந்த மலேரியா ஒட்டுண்ணிகளிடமிருந்து இந்த மருந்து எதிர்ப்பு சக்தி , தாய்லாந்து – கம்போடியா எல்லையிலேயே உருவாகியதாக அவர்கள் கூறுகிறார்கள். இதன் பின்னர்தான் இந்த மலேரியா ஒட்டுண்ணிகள் ஆப்ரிக்காவுக்கும் பிற இடங்களுக்கும் பரவியதாக அவர்கள் கூறுகிறார்கள்.

இப்போது விஞ்ஞானிகள் இந்த மரபணு மாற்றங்கள்தான் இந்த ஒட்டுண்ணிகள் ஒழிக்கப்படுவதிலிருந்து தப்ப உதவுவதாகக் கண்டறிந்திருக்கிறார்கள்.

மேலும் இது குறித்த ஆராய்ச்சிகள் இது எப்படி நடக்கிறது என்பதை அறிய உதவும் என்று அவர்கள் நம்புகிறார்கள்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -