Posted by : Admin Thursday, 2 October 2014

ஆரோக்கியமான உடலுக்கு ஆதாரமாக இருப்பவை எலும்புகள், எலும்புகள் பலம் குறைவதால் பல்வேறு நோய்கள் தொற்றிக் கொள்ளும்.
கால்சியம் சத்து அதிகம் உள்ள பால், கீரைகள் போன்றவற்றை சாப்பிடாமல் இருப்பதால் ஆஸ்டியோபோரோசிஸ் என்ற நோய் தாக்குவதற்கு காரணமாக அமைகிறது.

மேலும் வைட்டமின் டி குறைபாடினாலும் முதுகெலும்பை தாக்கும் இந்த நோய், பின்னர் கை கால் எலும்புகளையும் பாதிக்க செய்கிறது.

பெண்களுக்கு மாதவிலக்கு நிற்கும் காலத்தில் இந்த நோய் ஏற்படுவது வழக்கம். இந்த நோயின் காரணமாக எலும்புகள் போதிய சக்தியில்லாமல் எளிதில் உடையும் நிலையை அடைகின்றன.

பல மணி நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்திருப்பது, போதிய அளவு உடற்பயிற்சி செய்யாதது போன்ற காரணங்களால் இந்த நோய் தற்பொது இளைஞர்களை தாக்கி வருகிறது.

இதற்காக சில ஆரோக்கியமான உணவு பொருட்களை உட்கொள்ள வேண்டியது அவசியமாகிறது.

சத்துக்கள் அடங்கிய பேரிச்சம்பழம்

பேரிச்சம்பழத்தில் கால்சியம், மாங்கனீஸ் உள்ளது. அதேபோல் தாமிரச்சத்துக்களும், மங்கனீசியமும் காணப்படுகின்றன. இது எலும்புகளை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.



சத்தான காய்கறி, பழங்கள்

முட்டைக்கோஸ், காலிப்ளவர், பீட்ரூட், வெண்டைக்காய் போன்ற காய்கறிகளை தினசரி சேர்த்துக்கொள்வதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும். ஆரஞ்சு, கொய்யா, ஸ்ட்ராபெர்ரி, வாழைப்பழம், ஆப்பிள் போன்றவை எலும்புகளை பாதுகாப்பாக வைத்திருக்கும்.



கால்சியம் நிறைந்த பால் உணவு

சீஸ், யோகர்டு, பன்னீர், ஸ்கிம்டு மில்க் பவுடர் போன்றவற்றில் கால்சியம் காணப்படுகிறது. அவற்றை சாப்பிடலாம். குறைந்த கொழுப்பு சத்துள்ள பால் பொருட்களை சாப்பிடவேண்டும். இதனால் எலும்புகள் பலமடையும்.



கால்சியம் நிறைந்த ராகி

100 கிராம் ராகியில் 330 மில்லிகிராம் முதல் 350 மில்லி கிராம் கால்சியம் சத்து உள்ளது. எனவே ராகி சாப்பிடுவதன் மூலம் எலும்புகள் ஆரோக்கியமாக இருக்கும்.



எலும்பை காக்கும் பருப்புகள்

சோயா பீன், கொள்ளு போன்றவைகளில் கால்சியம் சத்து காணப்படுகின்றன. அதே போல் ஒமேகா 3 கொழுப்பு அமிலங்கள் கொண்ட மீன் உணவுகளை உட்கொள்ளலாம். கருப்பு உளுந்து கால்சியம் சத்து நிறைந்தது. இவை எலும்புகளை பாதுகாக்கும்.



வைட்டமின் டி சத்து உள்ள சூரிய ஒளி

வைட்டமின் டி சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்வது அவசியம். சூரிய ஒளியில் வைட்டமின் டி உள்ளது. எனவே உடலில் சூரிய ஒளி படுமாறு நிற்கலாம். எலும்புகளின் வளர்ச்சிக்கும், சருமத்திற்கும் வைட்டமின் டி அவசியமாகிறது.



தாது உப்புகள் நிறைந்த கொட்டைகள்

பாதாம், பிஸ்தா, போன்ற கொட்டைகளில் உடலுக்குத் தேவையான தாது உப்புகள் உள்ளன. கால்சியம், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ் போன்றவைகள் காணப்படுகின்றன. இவற்றின் மூலம் எலும்புகள் பாதிப்படையாமல் தப்பிக்கலாம்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -