Posted by : Admin Saturday, 9 August 2014

பிஸ்தாவில் அதிக அளவில் வைட்டமின் பி6 உள்ளது. இது, இரத்ததில் ஹீமோகுளோபின் உற்பத்திக்கு மிகவும் அவசியமானது. அதோடு மட்டுமில்லாது செல்களுக்கு ஆக்ஸிஜனை கொடுக்கிறது. பிஸ்தா பருப்பில் டெரிபின்தினேட், இனிப்புச் சுவையுடைய நறுமண எண்ணெய், காலோடானிக் அமிலம் ஆகியன காணப்படுகின்றன. இவை நரம்பு மணடலத்தை தூண்டி, ஹார்மோன்களின் சுரப்பை அதிகப்படுத்தி, புத்துணர்ச்சியை உண்டாக்குகின்றன. 

பிரசவித்த பெண்கள் பிஸ்தா பருப்பை பாலுடன் வேகவைத்தோ அல்லது நெய்யில் பொரித்தோ சாப்பிட தாய்ப்பால் நன்கு சுரக்கும். ஆண், பெண் இருபாலரும் பிஸ்தா பருப்பை சூடான பாலில் ஊறவைத்து தினமும் மாலையில் சாப்பிட போக சக்தி அதிகரிக்கும். 

புத்துணர்ச்சி

உடலுக்கு புத்துணர்ச்சியையும், சுறுசுறுப்பையும் உண்டாக்குவதில் ஹார்மோன்கள் பெரும் பங்கை வகிக்கின்றன. இந்த ஹார்மோன்களில் சுரக்கும் நாளமில்லா சுரப்பிகள் ஆயுட்காலத்தை நீடிக்கச் செய்யும் அத்தியாவசிய உறுப்புகளாக கருதப்படுகின்றன. இந்த உறுப்புகள் தங்கள் சுரப்பை அதிகப்படுத்தும் பொழுதும், குறைக்கும் பொழுதும் உடலில் பலவித குறைபாடுகள் தோன்றுகின்றன. இந்த நாளமில்லா சுரப்பிகளின் செயல்பாடு மருத்துவ உலகிற்கு சவாலாகவும், பலவித ஆச்சர்யங்களை ஏற்படுத்துவதாகவும் உள்ளது.

இதய ஆரோக்கியம்: 

பிஸ்தா பருப்பு வைட்டமின் ஏ மற்றும் இ போன்ற ஆன்டிஆக்ஸிடெண்டுகளை அதிகப்படுத்தி இரத்த நாளங்களை பாதுகாக்கும் மேலும் இதயநோய் அபாயத்தை குறைக்கும் சக்தி கொண்டது...   பிஸ்தா சாப்பிடுவதால் உடலில் உள்ள கெட்ட எல்டிஎல்(றீபீறீ) கொழுப்பை குறைப்பதோடு ஆரோக்கியம் தரக்கூடிய ஹெச்டிஎல்(லீபீறீ) கொழுப்பை அதிகரிக்கச்செய்யும். பிஸ்தா உட்கொண்டால் லுடீன் அளவை அதிகரிப்பதோடு இதயநோயின் அளவையும் குறைக்கும். 

நீரிழிவு நோய்

பிஸ்தா சாப்பிட்டால் டைப்2 நீரிழிவை பாதுகாக்கும். ஒரு கப் பிஸ்தா பருப்பில் 60% மினரல் பாஸ்பரஸ் கொண்டுள்ளது. மேலும் அமினோஆசிட்ஸ், பாஸ்பரஸ் ஆசிட்ஸ் குளுக்கோஸ் ஆகியவற்றை குறைக்கவும் உதவிபுரிகிறது.. மேலும் பிஸ்தாவில் பாஸ்பரஸ் ஆனது அதிக அளவில் உள்ளதால், குளுக்கோஸை அமினோ அமிலமாக சிதைக்கிறது. இதனால் நீரிழிவு நோயாளிகளுக்கு பிஸ்தா ஒரு நல்ல பயனுள்ள உணவாகும். 

ஆரோக்கியமான இரத்தம்

பிஸ்தா பருப்பில் வைட்டமின் பி6 ஊட்டச்சத்து அதிகளவு உள்ளது. வைட்டமின் பி6 ல் ஹீமோகுளோபின் அதிகப்படுத்தக்கூடிய தன்மையும், ஆக்ஸிஜனை ரத்தஓட்டம் வழியாக செல்களுக்கு கொண்டுசேர்க்கும் பொறுப்பு மற்றும் ஆக்ஸிஜனை அளவை அதிகரிக்கும் பணியை செய்கிறது.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -