Posted by : Admin Tuesday, 15 July 2014

மிழர்களுடைய கலாச்சாரத்தில் முக்கிய பங்கு வாழை இலைக்கு உண்டு. தலைவாழை என்றதும் நம்அனைவருக்கும் ஞாபகம் வருவது விருந்துதான். அது சைவ உணவாக இருந்தாலும், அசைவ உணவாக இருந்தாலும் இலையில்தான் நிச்சயம் இருக்கும். இன்றைய அசுர வேகமான முன்னேற்றத்தில் வாழை இலை மறைந்து கொண்டு இருக்கின்றது. வாழை இலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் பயன்கள் சூடான உணவுகளை வாழை இலையில் வைத்து பரிமாறும்போது அதில் ஒருவித மணம்தோன்றும். அதற்கு நம்முடைய பசியினை தூண்டும் செய்கை உண்டு. இதனால்தான் நம் முன்னோர்கள் சாப்பிடுவதற்கு வாழை இலையினை தேர்ந்தெடுத்தனர். வாழை இலையில் தொடர்ந்து உணவு உட்கொண்டு வந்தால், தோல் பளபளப்பாகும். உடல் நலம் பெறும். மந்தம். 

வலிமைக்குறைவு, இளைப்பு போன்றபாதிப்புகள் நீங்கும். அழல் எனப்படும் பித்தமும் தணியும். வாழை இலையில் சாப்பிடுவதால், இளநரை வராமல் நீண்டநாட்கள் தலைமுடி கருப்பாக இருக்கும். வாழை இலை ஒரு கிருமி நாசினியாகும். உணவில் உள்ள நச்சுக்கிருமிகளை வாழை இலை அழிக்கும் தன்மை கொண்டது. இதனால் நோயின்றி நீண்ட ஆரோக்கியத்தை அளிக்கிறது. வாழை இலையின் மேல் உள்ள பச்சை தன்மை(குளோரோபில்) உணவை எளிதில் ஜீரணமடைய செய்வதுடன் வயிற்றுப்புண்ணை ஆற்றும் தன்மை கொண்டது. 

 தீக்காயம்ஏற்பட்டவர்களை வாழைஇலைமீதுதான் படுக்க வைக்க வேண்டும். அப்போதுதான் சூட்டின் தாக்கம் குறையும். பச்சிளம் குழந்தைகளை உடலுக்கு நல்லெண்ணைய் பூசி வாழை இலையில் கிடத்தி காலை சூரிய ஒளியில் படுக்க வைத்தால் சூரிய ஒளியில் இருந்து பெறப்படும் விட்டமின் டியையும், இலையில் இருந்து பெறப்படும் குளுமையை யும் குழந்தைகளை சரும நோயில் இருந்து பாதுகாக்கும்.

 சின்ன அம்மை, படுக்கை புண்ணுக்கு வாழைஇலையில் தேன்தடவி தினமும் சிலமணி நேரம் படுக்க வைத்தால் விரைவில் குணமாகும். சோரியாசிஸ், தோல் சுழற்சி, கொப்பளங்கள் பாதிக்கப்பட்ட இடத்தில் வாழை இலையை கட்டி வைக்க வேண்டும். இதுபோன்ற பல்வேறு மருத்துவ குணங்கள் வாழை இலைக்கு உண்டு. எனவே வாழ்க்கையில் நோயின்றி வாழ வாழை இலையை பயன்படுத்துங்கள்

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -