Posted by : Admin Sunday, 6 July 2014

குளிர்காலத்தில் வறண்டிருக்கும் சருமம் பட்டுபோல் மென்மையாகவும், அதீத பொலிவுடனும் இருக்க குறிப்பிடப்பட்டிருக்கும் எளிமையான புதுவகை பேஷியல்களை பயன்படுத்துங்கள். 

மஞ்சள் பேஷியல் 

 மஞ்சள் தூள், சந்தனம், பால், பாதாம் எண்ணெய்,எலுமிச்சை சாறு, முட்டையின் வெள்ளை கரு ஆகியவற்றை ஒன்றாக கலந்து 20 நிமிடங்கள் முகத்தில் பூசி அகற்றினால் உங்கள் சருமம் அடைந்திருக்கும் அழகான மாற்றத்தை நீங்கள் கண்கூடாக பார்க்கலாம். 

 தேன் பேஷியல் 

 1 ஸ்பூன் பால் பவுடர், 1 ஸ்பூன் தேன், 1 ஸ்பூன் எலுமிச்சை சாறு, பாதாம் எண்ணெய் ஆகியவற்றை நன்றாக கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் வைத்தால் வறண்ட சருமம் மிருதுவாக மாறும் 

 ஓட்ஸ் பேஷியல் 

 ஓட்ஸ், தயிர், தக்காளி பழச்சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து முகத்தில் பூசி 20 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவினால் நிமிடத்தில் உங்களின் சரும நிறம் பொலிவடைந்திருப்பதை உணரலாம். 

 பாதாம் பேஷியல்

 பாதாம் பருப்பை தண்ணீரில் ஊறவைத்து, தோலை நீக்கி அரைத்து கொள்ளுங்கள்.இதனுடன் சிறிது கடலை மாவு, பால் மற்றும் எலுமிச்சை சாறு சேர்த்து, தொடர்ந்து 2 வாரங்களுக்கு முகத்தில் பூசி வந்தால், நீங்கள் பியூட்டி பார்லருக்கு போக வேண்டியதே இல்லை.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -