Posted by : Admin
Sunday, 6 July 2014
காளான் சாப்பிட்டால் உயர் இரத்த அழுத்தம் மற்றும் இரத்த நாளங்களின் உட்பரப்பில் உண்டாகும் கொழுப்பு அடைப்பைத் தடுக்கிறது. காளானில் உள்ள லென்ட்டைசின், எரிட்டிடைனின் என்ற வேதிப் பொருட்கள் இரத்தத்தில் கலந்துள்ள ட்ரை கிளிசஸ்ரைடு பாஸ்போலிட் போன்றவற்றை வெகுவாகக் குறைக்கிறது. காளான்களை உணவாக உட்கொள்வதன் மூலம் சத்துப் பற்றாக்குறையை போக்க முடியும். காளான்களில் புரதச்சத்து, நார்ச்சத்து, வைட்டமின்கள், தாது உப்புகள், அமினோ அமிலங்கள் அதிக அளவிலும், கொழுப்பு, மாவுச்சத்து குறைவான அளவிலும் உள்ளன.
புரதச்சத்து காய்கறிகள் மற்றும் பழங்களை விட காளான்களில் அதிகமாக உள்ளது. போலிக் அமிலம், இரும்பு, கால்சியம், பாஸ்பரஸ் போன்ற சத்துகள் அதிக அளவில் இருப்பதால் ரத்த சோகைக்கு சிறந்த மருந்து. நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த உணவு. நார்ச்சத்து அதிகம் இருப்பதால், மலச்சிக்கல், வயிற்றுக் கோளாறு போன்ற நோய்களை போக்கும். இதயத்தை பாதுகாப்பதில் காளானின் பங்கு அதிகம். மேலும் காளானில் உள்ள இரத்த நாளங்களில் ஏற்படும் பாதிப்பை சீர்செய்யும்.
காளான் மூட்டு வாதம் உடையவர்களுக்கு சிறந்த நிவாரணியாகும். மலட்டுத்தன்மை, பெண்களுக்கு உண்டாகும் கருப்பை நோய்கள் போன்றவற்றைக் குணப்படுத்துகிறது. தினமும் காளான் சூப் அருந்துவதால் பெண்களுக்கு உண்டாகும் மார்பகப் புற்று நோய் தடுக்கப்படுவதாக காளான் பற்றிய சமீபத்திய ஆராய்ச்சியில் கண்டுபிடித்துள்ளனர். 100 கிராம் காளானில் 35 சதவீதம் புரதச்சத்து உள்ளது.
மேலும் உடல் வளர்ச்சிக்குத் தேவையான அமினோ அமிலங்கள் உள்ளதால், குழந்தைகளின் உடல் வளர்ச்சிக்கு சிறந்த ஊட்டசத்தாக அமைகிறது. கடும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு உடல் இளைத்தவர்கள் தினமும் காளான் சூப் அருந்தி வந்தால் விரைவில் உடல் தேறும். அசைவ உணவுக்குப் பதிலாக காளான் உணவை உட்கொண்டால் நோயின்றி பல்லாண்டு காலம் வாழலாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- காளான் சாப்பிட்டு பல்லாண்டு காலம் வாழுங்கள்!

