Posted by : Admin Thursday, 3 July 2014

காய்கறிகளில் உயிர்சத்துகளும், ஊட்டச்சத்துகளும் அடங்கியுள்ளன. அவற்றில் உள்ள தாவர வேதிப்பொருட்கள், நெடுநாள் நோய்களான புற்றுநோய், இருதய நோய்கள் மற்றும் நீரழிவு போன்றவற்றை தடுக்கும் திறன் கொண்டவை ஆகும். செரிபரோ வாஸ்குளார் நோயினால் ஏற்படும் இறப்பிற்கும், பழங்கள் மற்றும் காய்கறிகள் உட்கொள்ளும் அளவிற்கும் எதிர்மறையான தொடர்பு காணப்படுகிறது. 

 ஒரே தாவர வேதிப்பொருளைக் காட்டிலும், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிக் கலவையில் இருந்து கிடைக்கும் பலவகை வேதிப்பொருட்கள் உடலை நன்கு காத்து பராமரிக்கின்றன. பொதுவாக நாம் காய்கறிகளை உணவில் சேர்த்து வருகிறோம்.இதன் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்து தாராளமாய் நமக்கு கிடைக்கிறது. ஆனால் அதே சமயம் வேர் காய்கறிகளை அதிக அளவில் உட்கொள்வதால் சாதாரண காய்கறிகளில் இருந்து கிடைக்கும் சத்துகளை விட அதிகமாக நம்மால் பெற முடிகிறது. இவை ஊட்டசத்துக்கள் மட்டுமல்லாமல் நமது உடலில் ஏற்படும் பல வித பிரச்சனைகளையும் தீர்க்க வல்லது. 

 இதயம் காக்கும் டர்னிப்

 டர்னிப் சாலட்டில் சேர்க்கக்கூடிய ஒரு சிறப்பான காய்கறி. அதிலும் முக்கியமாக இந்த டர்னிப் இதயத்திற்கு ஆரோக்கியத்தை தரக்கூடிய ஒரு வேர் காய்கறி. இதில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் அதிகமான அளவில் அடங்கியுள்ளது. 

 எடையை குறைக்கும் உருளைகிழங்கு

 உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் நிறைய உள்ளது. மேலும் இவை உடலுக்கு அதிகப்படியான ஆற்றலையும் கொடுக்கக்கூடியவை. ஆனால் உடல் எடையை குறைக்க நினைத்தால், இதனை டயட்டில் சேர்க்கக்கூடாது. 

 நோய் எதிர்ப்பு சக்தியளிக்கும் வெங்காயம் 

வெங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் மற்றும் நோயெதிர்ப்பு அழற்சி பொருள் அதிகம் நிறைந்துள்ளதால், அவை நோய்த்தொற்றுகளை எதிர்த்துப் போராடும். மேலும் இதில் ஜிங்கு உள்ளதால், ஆண்களின் ஹார்மோன்களின் செயல்பாடுகளை அதிகரிக்கும். 

 இருமல் போக்கும் இஞ்சி 

 இஞ்சியில் நிறைய செரிமான நொதிகள் நிறைந்திருப்பால், அவை அசிடிட்டி பிரச்சனை உள்ளவர்களுக்கு மிகவும் சிறந்தது. குறிப்பாக இருமல், சளி மற்றும் தொண்டையில் தொற்று உள்ளவர்களுக்கு இஞ்சி நல்ல நிவாரணத்தைக் கொடுக்கும். 

 சருமம் காக்கும் கேரட் 

 கேரட் சாப்பிட்டால், கண்களுக்கு மிகவும் நல்லது. ஏனெனில் இதில் கண்களுக்கு ஆரோக்கியத்தை தரும் வைட்டமின் ஏ அதிகம் உள்ளது. மேலும் இதனை தினமும் சாப்பிட்டால், சருமம் பொலிவாக இருக்கும். 

 சக்கரைநோய் போக்கும் முள்ளங்கி

 நீரிழிவு நோயாளிகளுக்கு முள்ளங்கி ஒரு சிறப்பான உணவுப் பொருள். ஏனென்றால் இதில் கிளைசீமிக் இன்டெக்ஸ் மிகவும் குறைவாக உள்ளது. மேலும் இவற்றில் பொட்டாசியம் அதிக அளவில் நிறைந்துள்ளதால், இரத்த அழுத்தத்தை சீராக வைக்கும். 

 நரம்பு பிரச்சனை தீர்க்கும் சேனைக்கிழங்கு 

 சேனைக்கிழங்கில் கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்துள்ளது. மேலும் இதில் வைட்டமின்-பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், அவை நரம்புகளை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவியாக இருக்கும். 

 ஆற்றல் அதிகரிக்கும் சக்கரைவள்ளி கிழங்கு 

 சர்க்கரைவள்ளிக் கிழங்ககில் உடலுக்கு வேண்டிய ஆற்றல் அதிகம் இருப்பதோடு, சாதாரண உருளைக்கிழங்கை விட குறைவாகவே ஸ்டார்ச்சானது உள்ளது. மேலும் இதில் வைட்டமின் பி காம்ப்ளக்ஸ் அதிகம் இருப்பதால், இன்சுலின் சுரப்பை சீராக வைக்கும். 

 சளியை துரத்தும் பூண்டு

 பூண்டில் அல்லிசின் என்னும் பொருள் நிறைந்துள்ளது. எனவே இதனை உணவில் அதிகம் சேர்த்தால், இதயம் நன்கு ஆரோக்கியமாக இருக்கும். அதிலும் பச்சையாக பூண்டை சாப்பிட்டால், சளி மற்றும் இருமல் குணமாகிவிடும்.









Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -