Posted by : Admin Thursday, 3 July 2014

உணவில் இடையூறாக இருக்கும் என நினைத்து ஒதுக்கும் கறிவேப்பிலை மருத்துவ குணங்கள் நிறைந்தது ’கறிவேப்பிலை’ பாரம்பரிய உணவு வகைகளான கறி, இரசம் போன்றவற்றிலும், வடை, முறுக்கு போன்ற திண்பண்டங்களிலும் தொன்றுதொட்டே பயன்படுத்தப்பட்டு வருகின்றது. உணவு வகைகளில் போடப்பட்டிருக்கும் கறிவேப்பிலையை, உண்ணும் போது சிலர் எடுத்து வெளியில் போட்டுவிட்டே உண்பர். அநேகமானோர் இதனை சமைக்கும் உணவு பதார்த்தங்களில் போடப்படும் ஒரு கறிச்சுவையூட்டியாக அல்லது வாசனைப் பொருளாக மட்டுமே கருதி விடுகின்றனர். ஆனால் கறிவேப்பிலை வாசனைப் பொருளாக மட்டுமன்றி, சமைக்கும் உணவு வகைகளில் சேர்த்துக்கொள்ளும் வழக்கம் பல மருத்துவ நலன்களையும் அடிப்படையாக கொண்டதாகும் கறிவேப்பிலை ஒரு சிறந்த நோய் எதிர்ப்புக் காரணியுமாகும். 

 கொழுப்புச் சத்து குறைய 

 இன்று நாம் கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளையே அதிகம் சாப்பிடுகிறோம். இதனால் இரத்த அழுத்தம், உடல் பருமன், உடல் சோர்வு போன்றவை உருவாகின்றது. இந்த கொழுப்புப் பொருள் பெரும்பாலும் எண்ணெயின் மூலம் அதிகம் உடலில் சேர்கின்றது. ஒரு லிட்டர் எண்ணெயில் 10 கறிவேப்பிலை போட்டு காய்ச்சி வடிகட்டினால் எண்ணெயில் உள்ள கொழுப்புச் சத்து நீங்கும். 

 இளநரை மாற 

 இன்றைய நவீன இரசாயன உணவு வகைகளாலும் பதப்படுத்தப்பட்ட உணவுகளாலும் உடலுக்குத் தேவையான சத்துக்களைக் கொடுக்க முடியவில்லை. இதனால் இளவயதிலேயே தலைமுடி நரைக்க ஆரம்பித்து முதுமையை வெகுவிரைவில் கொண்டு வந்து விடுகின்றது. இவர்கள் தினமும் உணவில் சேர்க்கும் கறிவேப்பிலையை ஒதுக்காமல் சாப்பிட வேண்டும். கறிவேப்பிலையை தலையில் தேய்க்கும் எண்ணெயில் போட்டு காய்ச்சி ஆறவைத்து பாட்டிலில் அடைத்து தலையில் தேய்த்து வந்தால் இளநரை மாறும். 

 ஜீரண பிரச்சனைக்கு 

 சுக்கு, மிளகு, சீரகம், கறிவேப்பிலை எல்லாம் சம அளவு எடுத்து பொன் வறுவலாக வறுத்துப் பொடியாக்குங்கள். ஓர் உருண்டை சோற்றில் அரை ஸ்பூன் அளவுக்கு இந்தப் பொடியைப் போட்டு நெய்விட்டுச் சாப்பிட்டுவர ஜீரண உறுப்புகள் எல்லாம் வலுவாகும். தோல் நோய் குணமாக வேப்பிலை போன்று கறிவேப்பிலையையும் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசிவர முகப்பரு, தேமல் மற்ற தோல் நோய்களும் சரியாகும். வயிற்றுப் போக்கு குணமாக கறிவேப்பிலை – 20 கிராம், சீரகம் – 5 கிராம் இரண்டையும் அரைத்து வாயில் போட்டு வெந்நீரை குடிக்க வேண்டும். சிறிது நேரம் கழித்து ஒரு டீஸ்பூன் சுத்தமான தேனையும் பருக வேண்டும். இவ்வாறு மூன்று வேளைகள் அருந்தி வந்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். 

மன அழுத்தம் நீங்க 

 கறிவேப்பிலையை நன்கு நீரில் அலசி அதனுடன் சிறிது இஞ்சி, சின்ன வெங்காயம், 2 பூண்டு பல், சீரகம், புதினா அல்லது கொத்தமல்லி கலந்து நன்கு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து நன்கு கலக்கி மதிய உணவில் சாதத்தோடு கலந்து சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டு வந்தால் மன இறுக்கம், மன உளைச்சல், மன அழுத்தம் குறைந்து குழப்பமான மனநிலை மாறும். மேலும் ஞாபக சக்தியைத் தூண்டும். உடலை புத்துணர்வு பெறச் செய்யும். 

 சர்க்கரை நோயாளிகளுக்கு 

 சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அதிக மயக்கத்துக்கு ஆளாவார்கள். மேலும் கைகால் வலி கண்பார்வை குறைபாடு உண்டாகும். இவர்கள் அடிக்கடி கறிவேப்பிலையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கறிவேப்பிலையை நிழலில் உலர்த்தி காய வைத்து பொடியாக்கி கஷாயம் செய்து காலை மாலை குடித்து வந்தால் உடலில் சர்க்கரையின் அளவை சீராக வைத்திருக்கும். 

 முடியை கருமையாக்க 

 வாரத்துக்கு ஒரு முறை, ஒரு பிடி கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்துக் கொள்ளுங்கள். அதனுடன் சீயக்காய், ஒரு டீஸ்பூன் தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து, சிறிது நேரம் ஊற வைத்து அலசும்போது, கூந்தல் கருகருவென வளர ஆரம்பிக்கும். முடி செம்பட்டையாக இருந்தாலும்


Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -