Posted by : Admin
Sunday, 15 September 2013
சில பெண்களுக்கு தொடர்ந்து ஏன் கருச்சிதைவு ஏற்படுகிறது என்பதை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்
. ஸ்டெராய்ட் (Steroid)-கள் எனப்படும் ஊக்கமருந்துகளின் அளவு குறைவாக இருப்பதே இதற்குக் காரணம் என தற்போது வார்விக் (Warwick) பல்கலைகழகத்தின் ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்துள்ளனர். இவ்வாறு சில பெண்களுக்கு தொடர்ந்து கருச்சிதைவு ஏற்படுவதால் அவர்களுக்கு மன உளைச்சலும், வெறுப்பும் ஏற்படுவதாக மருத்துவர்கள் கூறினர்.
ஆனால் இதற்காக பெண்கள் தாமாகவே ஸ்டெராய்ட் (Steroid)-கள் வாங்கி உட்கொள்ள கூடாது எனவும் எச்சரித்துள்ளனர். இன்னும் பல்வேறு விஷயங்கள் ஆராயப்பட வேண்டி இருப்பதாக மகப்பேறு மருத்துவர்கள் கூறியுள்ளனர்.
'
Related Posts :
- Back to Home »
- பெண்கள் »
- தொடர்ச்சியாக கருச்சிதைவு ஏற்படுவதற்கு ஊக்கமருந்து குறைவே காரணம் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

