Posted by : Admin
Wednesday, 6 March 2013

இன்று காலை கொழும்பு - விகாரமா தேவி பூங்காவில் நடாத்தப்பட்ட ஆர்பாட்டத்தில் பங்குபற்றுவதற்காக வவுனியாவிலிருந்து கொழும்பு நோக்கி 12 பஸ் வண்டிகளில் புறப்பட இருந்த நூற்றுக் கணக்கான பொதுமக்களையும், த.தே.கூ நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நேற்று வவுனியாவில் பொலிஸார் தடுத்து வைத்தனர்.
இதனையடுத்து குறிப்பிட்ட ஆர்ப்பாட்ட பேரணி இன்று காலை 10 மணியளவில் வவுனியா நகர சபையிலிருந்து பேரணி யாக சென்று வவுனியா மாவட்டச் செயலகத்தை சென்றடைந்தது.
யாழ்பபாணம், கிளிநொச்சி, முல்லைத்தீ, மன்னார், வவுனியா ஆகிய மாவட்டங்களில் இருந்து காணாமல் போனோரின் ஆயிரம் கணக்கான உறவுகள் இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டனர்.
எங்கள் வாழ்க்கை இன்னும் தெருவில்தானா?, அரசே காணாமல் போனது எங்கள் மகள்.. காணாமல் போனது எவ்வாறு... பதில் கூறும் அரசே.., வெள்ளை வேனும் அரசுதான்.. கடத்தியதும் அரசுதான்... காணாமல் போவதும் அரசாலே.. கடத்தி செல்வதும் அரசாலே.., குற்றம் செய்திருந்தால் கோட்டுக்கு கொண்டு வா.., எங்கள் பிள்ளைகயை மீண்டும் எங்களிடம் தாருங்கள், தடுத்து வைத்திருப்போரின பட்டியலை வெளியீடு, எனது அப்பா எங்கே? அவரை பார்ப்பதற்கு அனுமதி தாருங்கள்.., தந்துவிடு அரசே தந்துவிடு எங்கள் பிள்ளைகளை தந்துவிடு... இருக்கும் இடத்தை சொல்லிவிடு... இனியும் எங்களை வாழவிடு என்ற வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாதைகளை ஏந்தி கண்ணீர் மல்க ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
virakesari.lk
virakesari.lk