Posted by : Admin Saturday, 2 June 2012


வீட்டுத்தோட்டத்தில் வளர்க்கப்படும் சோற்றுக்கற்றாழை முக அழகை பாதுகாக்கும் அழகு சாதனப்பொருளாக பயன்படுகிறது.
கோடைகாலத்தில் சருமம் வறட்சியடையாமல் பாதுகாப்பதோடு கொப்புளங்கள், முகப்பரு போன்றவை ஏற்படாமல் தடுக்கிறது.


கற்றாழையை உபயோகித்து காசு செலவில்லாமல் சருமத்தை பாதுகாப்பதற்கு அழகியல் நிபுணர்கள் கூறும் ஆலோசனையை படியுங்களேன்.

கோடை கொப்புளங்கள்: கோடைகாலத்தில் சருமத்தில் ஆங்காங்கே கொப்புளங்கள் ஏற்படுவது இயல்பு. இதனால் வலியும் எரிச்சலும் ஏற்படும். இதற்கு கற்றாலை சிறந்த மருந்தாக செயல்படுகிறது.

கற்றாழையை பறித்து அதனை பிழிந்து சாறு எடுத்து அதில் சில துளிகள் எலுமிச்சை சேர்த்து கலக்கவும். இதனை ஒரு பருத்தி துணியில் தொட்டு முகத்தில் நன்றாக அப்ளை செய்யவும். பத்து நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவி விடலாம். இதனால் சருமம் பொலிவாகும். சருமம் வறட்சி நீங்கி ஈரப்பதத்தை தக்கவைக்கலாம்.

மூலிகை பேக்: கற்றாழைச் செடி அனைத்து சருமத்திற்கும் ஏற்ற சிறந்த மூலிகையாகும். இதனை ஜெல் போல செய்து முகத்தில் பூசி வர சருமம் ஜொலிக்கும்.

கற்றாழை செடியை பறித்து நன்றாக அரைத்து அதனுடன் ரோஸ் வாட்டர் சேர்க்கவும் கண்களைத் தவிர பிற பகுதிகளில் திக்காக பேக் போல போடவும்.

பின்னர் நன்றாக மூன்று நிமிடங்கள் வரை மசாஜ் செய்யவும். இதனால் முகத்தில் உயிரிழந்த செல்கள் உதிர்ந்து விடும்.

பதினைந்து நிமிடங்கள் கழித்து முகத்தை கிளன்சர் கொண்டோ அல்லது குளிர்ந்த நீரிலோ கழுவி விடலாம். வாரம் ஒருமுறை இவ்வாறு செய்து வர முகம் பொலிவாகவும் மென்மையாக இருக்கும்.

முகப்பரு வராது: கற்றாழையை பறித்து அதை நன்றாக கொதிக்கும் நீரில் போட்டு வேக வைக்கவும். இதனை எடுத்து நன்றாக அரைக்கவும் அதனுடன் தேன் சேர்க்கவும். இந்த கலவையை நன்றாக முகம் முழுவதும் அப்ளை செய்யவும்.

நன்றாக காயவிட்டு பின்னர் குளிர்ந்த நீரில் கழுவவும். இதனை வாரம் ஒருமுறை செய்து வர முகப்பரு இருந்தால் மறைந்து விடும். முகப்பருவே வடுக்களோ ஏற்படாது.

சென்சிடிவ் சருமம் உள்ளவர்கள் கற்றாழையுடன் வெள்ளரிக்காய், தயிர் சேர்த்து அரைத்து பேஸ்ட் போல செய்யவும். பதினைந்து நிமிடம் ஊறவைத்து நன்றாக குளிர்ந்த நீரில் கழுவ முகம் புத்துணர்ச்சியோடு இருக்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -