Posted by : Admin Monday, 28 May 2012

குறைந்த கலோரி மற்றும் நிறைய புரதச்சத்து இருக்கிற காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டு வந்தாலே உடல் எடை குறைவதோடு உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும் என தெரியவந்துள்ளது.
ஏனென்றால் டயட்டில் இருக்கும் போது நிறைய காய்கறி மற்றும் பழங்களை சாப்பிட்டால் எடை குறைவதோடு, புற்றுநோய், சிறுநீரகக்கல், இதய நோய், நீரிழிவு போன்ற நோய்கள் வராமல் உடல் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சுரைக்காய் ஜூஸ்:இதில் இரும்பு மற்றம் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இதை தினமும் காலையில் ஒரு டம்ளர் குடித்தால் எடை குறைவதோடு, உடலுக்கு பளபளப்பைத் தரும்.
தர்பூசணி ஜூஸ்:இதில் அதிக வைட்டமின்கள் உள்ளன. இது குடிப்பதால் உடல் எடை குறைவது மட்டுமல்லாமல், இதய நோய்க்கும் மிகச் சிறந்தது.
ஆரஞ்சு ஜூஸ்: இதில் அதிக புரதச்சத்தும், குறைந்த கலோரியும் இருப்பதால் உடல் எடை குறைவதற்கு மிகச் சிறந்த பானம். இதிலுள்ள வைட்டமின் சி உடலுக்கு நிறமும் தருகிறது. மேலும் இதைக் குடிப்பதால் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புக்கள் கரைந்து உடல் பிட் ஆகும்.
கேரட் ஜூஸ்:இந்த ஜூஸ் குடிப்பதால் கண்களுக்கு நல்லது. மேலும் இதை தினமும் குடித்தால் உடலுக்கு நிறத்தை தருவதோடு, உடல் எடையும் குறையும்.
திராட்சை ஜூஸ்:இது ஒரு சுவையான பழச்சாறு. இதில் ஆன்டி ஆக்ஸிடன்ட் இருப்பதால் உடலில் உள்ள கொழுப்புக்கள் எளிதாக குறைந்து உடல் எடை குறைந்துவிடும். மேலும் இது சிறுநீரகக் கோளாறு, இதய நோய், ஆஸ்துமா, செரிமானக் கோளாறு போன்ற பிரச்சனைகளை போக்குகிறது.
ஆகவே கஷ்டப்பட்டு எடை குறைக்காமல், ஈஸியாக இந்த இயற்கை பானங்களை அருந்தி எடையை குறையுங்கள்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -