Posted by : Admin Sunday, 20 May 2012

பாம்பு கடித்து சிகிச்சை செய்ய தாமதமாகி விட்டால், உடனே மயங்கி விழுவதுண்டு, சில சமயம் இறக்கவும் நேரிடும்.
இந்நிலையில் கண்கள் மேல் நோக்கி இருக்குமானால் உயிர் போக கூடிய நிலையில் இருக்கிறார்கள் என்று அர்த்தம்.
கண்களானவை பக்கங்கள் நோக்கி இறங்குமானால் உயிரானது பக்கங்களில் ஒடுங்கி இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம், இந்நிலையில் கண்கள் கீழ் நோக்கி இருக்குமானால் உயிருக்கு கொஞ்ச நேரத்திற்கு ஆபத்து இல்லை என அறியலாம்.

விஷத்தினால் பாதிக்கப்பட்டு பேச்சு - மூச்சில்லாமல் இருப்பவனை காப்பாற்றுவதற்கு,
கடிப்பட்டவர்களின் உடலில் பிரம்பு கொண்டு அடிக்கும் போது உடல் தடித்து விட்டால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம்.
மேலும் சுத்தமான குளிர்ந்த நீரை பாம்பு கடித்தவர்களின் மேல் கொட்டும் போது உடம்பு குளிர்ச்சியடைந்து ரோமம் சிலிர்த்தால் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சையை தொடரலாம்.
தலை முடியை பற்றி இழுத்தால் வலியுடன் அசைவு ஏற்பட்டாலும் உயிர் இருக்கிறது என அறிந்து சிகிச்சை செய்யலாம்.
தும்பை இலை - 10 கிராம்.
அகத்தி இலை - 10 கிராம்.
முருங்கை இலை - 10 கிராம்.
பெருங்காயம் - 10 கிராம்.
வசம்பு - 10 கிராம்.
உள்ளி - 10 கிராம்.
மிளகு -10 கிராம். இவைகளைத் தட்டி மூக்கிலும் காதிலும் விட உணர்வு வருவதுடன் விஷம் இறங்கும்.
ஆடு தீண்டாப்பாளை வேர் - 30 கிராம்.
கவுதும்பை வேர் - 30 கிராம்.
வெள்ளெருக்கு வேர் - 30 கிராம்.
மருக்காரை வேர் - 30 கிராம்
இவற்றைச் சிறுநீரில் ஊறவைத்து அரைத்து கடிவாயில் பூசி வர விஷம் நீங்கும்.
நாள்பட்ட விஷத்திற்கு மருந்து
வெள்ளெருக்கன் வேர் - 20 கிராம்.
சிறியா நங்கை வேர் - 20 கிராம்.
வெள்ளைக் காக்கணம் வேர் - 20 கிராம்.
நன்றாக அரைத்து 50 கிராம் நல்ல வெல்லத்துடன் சேர்த்து அரைத்து, 3 பாகமாக்கி 3 வேளை தினசரி சாப்பிடவேண்டும்.
குருவை அரிசிச் சாதம், புளியற்ற ரசம்(மிளகு ரசம்) சாப்பிடலாம். 3 நாள் 9 வேளை மருந்தில் நாள்பட்ட விஷம் அறவே நீங்கும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -