Posted by : Admin Friday, 30 March 2012

வயதானாலும், நோய் பாதிப்புகள் இருந்தாலும் உற்சாகமான நடனமாடுவது மனதையும், உடலையும் உற்சாகப்படுத்தி இளமையை மீட்டுத் தரும் என்கின்றனர் உளவியல் நிபுணர்கள்.

இசையோடு கூடிய நடனம் மன அழுத்தத்தை போக்குவதாகவும், இதயநோய் ஏற்படும் வாய்ப்பை குறைப்பதாகவும் உள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
வயதான நபர்கள் நடனம் ஆடும் போது அவர்கள் இளமையோடு இருப்பதாக உணர்கிறார்கள். எனவே உற்சாகமாக நடனமாடினால் விரைவில் இளமை திரும்பும்.
நடனமாடுவதால் உடல் இளைக்கிறது, ரத்த அழுத்தம் குறைக்கிறது. மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் சீராகிறது.
அல்லீமர் நோய்க்கு ஆளானவர்களை நடனமாடச் செய்வதன் மூலம் அவர்களின் ஆரோக்கியத்தில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். நடனமாடுவதன் மூலம் பாதங்கள், கால் தசைகள் உறுதியாகிறது.
மேலும் நடனம் ஆடினால் நீரிழிவு நோயை கட்டுப்படுத்தலாம் என்று சமீபத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட அனைவரும் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டனர்.
முதல்கட்ட ஆய்வில் வாரத்துக்கு 4 மணி முதல் 6 மணி நேரம் வரை நடனம் ஆட அவர்கள் அறிவுறுத்தப்பட்டனர். ஒரு மாதம் வரை அவர்கள் இவ்வாறு நடனம் ஆடினர். இதில் அவர்களது நீரிழிவு நோய் பாதிப்பு ஓரளவு கட்டுப்பாட்டிற்குள் வந்தது தெரியவந்தது. அத்துடன் அவர்களது உடல் எடையும் கணிசமாக குறைந்திருந்தது.
மன அழுத்தம், உணவு கட்டுப்பாடு இல்லாமை, முறையான உடற்பயிற்சிகள் இல்லாதது ஆகியவையே நீரிழிவு நோய்க்கு முக்கிய காரணம்.
தினமும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கி நடனமாடினால், உடலுக்கு போதிய பயிற்சி கிடைக்கிறது. இதனால் மன அழுத்தம் நீங்கி மனம் லேசாகிறது. உடலும் மனமும் சுறுசுறுப்பாக இருக்கிறது.
இதனால் நீரிழிவு நோய் பாதிப்பு கட்டுப்படுகிறது. பருமன் ஆகாமல் உடலை மெல்லியதாக வைத்திருக்கவும் நடனம் உதவுகிறது என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -