Posted by : Admin Sunday, 25 March 2012

மனித உடம்பில் ரத்தமானது சக்தி கடத்து பொருளாக செயல்படுகிறது. ரத்தம் ஆக்சிஜனை மூளைக்கும், இதயத்திற்கும் அனுப்புவதோடு மட்டுமல்லாமல் மனித நடமாட்டத்திற்கு தேவையான சக்தியையும் அளிக்கிறது.
ரத்தம் சுத்தமானதாக இருந்தால் தான் நம்மால் ஆரோக்கியமாக நடமாட முடியும். அசுத்தக் கலப்பில்லாமல் ரத்தத்தை சுத்திகரிக்கும் சக்தி அன்றாடம் உண்ணும் உணவுப் பொருட்களிலேயே உள்ளது.
எலுமிச்சை: ரத்தத்தில் உள்ள அசுத்தங்களை சுத்திகரித்து அவற்றை கழிவுகளாக வெளியேற்றும் சக்தி எலுமிச்சைக்கு உண்டு.
தினசரி காலை நேரத்தில் வெதுவெதுப்பான நீரில் எலுமிச்சை சாறுடன் தேன் கலந்து சாப்பிட ரத்தத்திற்கு புத்துணர்ச்சி கிடைக்கும். ஒருவாரம் இதை முயற்சித்துப் பாருங்களேன். உங்களின் உடலில் கிடைக்கும் அபரிமிதமான சக்தியை நீங்களே உணர்வீர்கள்.
நோய் எதிர்ப்பு சக்தி மிளகு: உணவுப் பொருட்களில் சுவைக்காக நாம் சேர்த்துக்கொள்ளும் மிளகு சிறந்த ரத்த சுத்திக்கரிப்பானாக உள்ளது. மிளகானது சிறந்த ஆன்டி ஆக்ஸிடென்ட்ஸ் உள்ளது. எனவே உணவுகளில் மிளகு சேர்த்துக் கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் அதிகரிக்கும்.
பசுமை காய்கறிகள்: பச்சை நிறமுடைய காய்கறிகள், கீரைகள் உடல் சக்தியை அதிகரிப்பவை என்பது அனைவரும் அறிந்ததே. இதில் உள்ள குளோரோபில் மனிதர்களுக்குத் தேவையான சக்தியை ரத்தத்திற்கு அளிக்கிறது.
டாக்ஸினை ரத்தம் கிரகித்துக் கொள்ள உதவிபுரிகிறது. நமக்குத் தேவையான சக்தி கிடைக்க அன்றாட உணவுகளில் பச்சைக் காய்கறி சாலட்களை அதிகம் உட்கொள்ளவேண்டும் என்கின்றனர் உணவியல் நிபுணர்கள்.
கண்ணிற்கு ஒளிதரும் காரட்: காரட்டில் உள்ள கரோட்டின் சத்து கண்ணிற்கும், சருமத்திற்கும் நன்மை தரக்கூடியது. நமது உணவில் காரட் அதிகம் சேர்த்துக்கொள்வதன் மூலம் ரத்தத்தில் உள்ள மாசுக்கள் சுத்திகரிக்கப்படுகின்றன. சமைத்து உட்கொள்வதை விட காரட் ஜூஸ் பருகுவது ஆரோக்கியத்திற்கு ஏற்றது.
வெள்ளைப்பூண்டு: உடல் ஆரோக்கியத்தைக் காப்பதில் வெள்ளைப்பூண்டு சிறந்த உணவாகும். இதில் ரத்தத்தில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை அகற்றுகிறது. ரத்தத்திற்கு புத்துணர்ச்சி அளிக்கிறது.
இது இறந்து போன செல்களை நீக்குவதோடு புதிய செல்களை ரத்தத்தில் விரைந்து உற்பத்தி செய்கிறது. எனவே வெள்ளைப்பூண்டினை அதிக அளவில் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று உணவியல் நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர்.
இந்த உணவுகளை உட்கொள்வதன் மூலம் ரத்தம் சுத்திகரிக்கப்படுவதோடு உடலுக்குத் தேவையான சக்தி எளிதில் கடத்தப்படும். இதனால் உடலும் உற்சாகமடையும் என்பது அவர்களின் அறிவுரையாகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -