Posted by : Admin
Thursday, 23 February 2012
தொண்டை வலி, உடல் வலியுடன் வைரஸ் அல்லது ப்ளூகாய்ச்சல் இருந்தால் உடனே சிகிச்சை பெற வேண்டும். இல்லாவிட்டால் பிற்காலத்தில் மறதி நோய் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரித்துள்ளனர்.
இதுபற்றி அமெரிக்க மருத்துவர்கள் கூறியிருப்பதாவது: இன்ப்ளூயன்சா, ஹெர்பஸ் வைரஸ்கள் தாக்குவதால் வைரஸ் காய்ச்சல், ப்ளூ காய்ச்சல் ஏற்படுகின்றன.
உரிய சிகிச்சை எடுக்காவிட்டால் இந்த வைரஸ்கள் உடலில் தங்கிவிடும். காலப்போக்கில் மூளை செல்களை வலுவிழக்கச் செய்து அழித்துவிடும். புதிய செல் உற்பத்தி பாதிக்கப்படும்.
மூளை செயல்பாடு, நினைவாற்றலும் பாதிக்கப்படலாம். மறதி நோய், பார்க்கின்சன் நோய் ஏற்படும் வாய்ப்பும் அதிகம்.
எனவே தொடர்ந்து ஒரு வாரம் தொண்டை, உடல் வலியுடன் வைரஸ், ப்ளூ காய்ச்சல் இருந்தால் உடனே மருத்துவரை அணுகி சிகிச்சை பெற்று கொள்ளுங்கள் என்றனர்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- வைரஸ் காய்ச்சலால் மூளை செல்கள் பாதிப்படையும்,,,

