Posted by : Admin
Wednesday, 29 February 2012
ஆழ்ந்த உறக்கத்திற்காக பயன்படுத்தப்படும் தூக்க மாத்திரைகள் உயிரையே பறித்துவிடும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தூக்க மாத்திரை சாப்பிடுவதால் ஏற்படும் விளைவுகள் குறித்து அமெரிக்கா விஞ்ஞானிகள் ஆய்வு மேற்கொண்டனர். மொத்தம் 23,500 பேரிடம் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 10,500 பேர் தூக்க மாத்திரை சாப்பிடுபவர்கள்.
தூக்க மாத்திரை சாப்பிட தொடங்கிய 2 1/2 வருடத்தில் பலவிதமான நோய்களால் இவர்கள் பாதிக்கப்படுவது தெரியவந்தது.
இவர்களில் 35 சதவீதம் பேர் புற்று நோயினால் பாதிக்கப்பட்டனர், குறிப்பாக 18 வயது முதல் 55 வயதுக்குட்பட்டவர்களுக்கு நோய் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
எனவே தூக்க மாத்திரைகளை எடுத்து கொள்வது உடல் நலத்துக்கு ஆபத்து என ஆய்வாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அதே நேரத்தில் தூக்க மாத்திரைகள் சாப்பிடுவதை நிறுத்துபவர்கள் தங்களது மருத்துவர்களின் அறிவுரையை கேட்டு அதன்படி நடக்க வேண்டும் எனவும் வலியுறுத்தி உள்ளனர்.