Posted by : Author
Saturday, 13 May 2017
சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சாப்பிட வேண்டிய உணவுகள், சாப்பிடக்கூடாத உணவுகள் உள்ளன. இது குறித்து விரிவாக தெரிந்து கொள்ளலாம்.
சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்
சாப்பிடக்கூடாத உணவுகள் :
உருளைக்கிழங்கு, சேனைக்கிழங்கு, மரவள்ளிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, பரங்கிக்காய், வாழைப்பழம், மாம்பழம், பலாப்பழம், அன்னாசிப்பழம், சீத்தாப்பழம், சப்போட்டா பழம், தர்பூசணி, பேரிட்சை, எருமைபால், பாலாடை, தயிர், வெண்ணெய், நெய், பால்கோவா, ஆட்டுக்கறி, மாட்டுக்கறி, பன்றிக்கறி, ஈரல், மூளை, முட்டையின் மஞ்சள் கரு, தேங்காய் எண்ணெய், வனஸ்பதி, பாமாயில், குளிர்பானங்கள், சர்க்கரை, வெல்லம், இனிப்பு பலகாரங்கள், சிப்ஸ், வடை, முறுக்கு, பூரி, சமோசா போன்ற எண்ணெயில் பொரித்த பலகாரங்கள், பிரட், பன், கேக், பப்ஸ், ஐஸ்கிரீம், நெய்பிஸ்கட், மிளகாய் சாஸ், தக்காளி சாஸ், ஊறுகாய், தேங்காய், வேர்கடலை.
சாப்பிடக்கூடியவை :
மேற்கண்ட காய்கறிகளை தவிர மற்ற எல்லாக்காய்களையும், கீரைகளையும் சாப்பிடலாம். பீட்ரூட், கேரட் அளவோடு சாப்பிடலாம். ஆப்பிள், கொய்யா, ஆரஞ்சு, பேரிக்காய், மாதுளை, சாத்துக்குடி, பப்பாளி, திராட்சை, மோர், பசும்பால், கொழுப்பு நீக்கப்பட்ட பால், கோழிக்கறி, மீன்(வறுக்கக்கூடாது), முட்டையின் வெள்ளைக்கரு, சூரியகாந்தி எண்ணெய், தவிட்டு எண்ணெய், நல்ல எண்ணெய், ஆலிவ் எண்ணெய் (ஒரு நபருக்கு மாதம் ½ லிட்டர் என்ற அளவில்), டீ, காபி (அளவோடு), வெள்ளரி, முளைகட்டி பாசிப்பயிறு, சுண்டல், முந்திரி, பாதாம், வால்நட்.
நார்ச்சத்து :
காய்கறிகள், பழங்கள், தானியங்கள், பயிர்கள், உலர்ந்த பருப்பு வகைகள் இவற்றில் நார்ச்சத்து உள்ளது. ஆனால், அசைவ உணவு வகைகளில் நார்சத்து இல்லை. நார்ச்சத்தின் அளவு முழு தானியங்களிலும், பழங்களிலுள்ள உட்புறத்தைவிட தோலிலும் அதிகமாக உள்ளது.
நார்ச்சத்துள்ள உணவு மலச்சிக்கல், மூலம் போன்ற நோயை தவிர்த்து உணவின் இயல்பான செரிமானத்தை அளிக்கிறது. நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள சர்க்கரை, கொலஸ்டிரால் அளவை குறைக்க உதவுகிறது. நார்ச்சத்து உடல் எடையை குறைத்து சீரான எடையை பராமரிக்க உதவுகிறது. நார்ச்சத்து நிறைந்த உணவு வயிற்றில் போதுமென்ற நிறைவை அளிக்கிறது. ஒரு நாளைக்கு 30 கிராமிற்கு அதிகமான நார்ச்சத்து தேவைப்படுகிறது.
நார்ச்சத்து நிறைந்த உணவு வகைகள் :
முழு கோதுமை மாவு(சலித்தல் கூடாது), கேழ்வரகு, ஓட்ஸ், சோளம், துவரம்பருப்பு, பச்சைப்பருப்பு, உளுத்தம்பருப்பு, பழங்கள், பீன்ஸ், முட்டைக்கோஸ், காலிபிளவர், பாகற்காய், வழைப்பூ, வாழைத்தண்டு, வெள்ளரிக்காய், முருங்கைக்கீரை, பசலைக்கீரை, பாலக்கீரை, பருப்புக்கீரை, மணத்தக்காளிக்கீரை, பொன்னாங் கண்ணி கீரை, பாதம், பிஸ்தா, முந்திரி போன்றவைகள்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- சர்க்கரை நோயாளிகள் சாப்பிட கூடாத உணவுகள்......

