Posted by : Author
Monday, 22 May 2017
எமது உடல் கலங்கள் பல்வேறு அணுக்களால் உருவாக்கப்பட்டுள்ளன. ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ள குறித்த அணுக்கள் மனிதனால் உணர முடியாத அளவிற்கு அதிர்ந்துகொண்டே இருக்கும்.
இவ் அதிர்வினால் சிறிய அளவில் ஒலி எழுப்பப்படும். இவ்வாறு எழுப்பப்டும் ஒலியை காதினால் கேட்பதற்கு உதவும் துணைச் சாதனம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.
இச் சாதனமானது சிறிய விசையினையும் அறியக்கூடிய வகையில் நனோ அளவிலான ஒளியியல் நார்களினால் உருவாக்கப்பட்டுள்ளது.
மேலும் இதன் மூலம் சாதாரண கலங்கள் மற்றும் புற்றுநோய் பாதிப்புக்கு உள்ளான கலங்கள் என்பவற்றிலிருந்து உண்டாகும் ஒலிகளை வேறுபிரித்தறிய முடியும்.
இதனால் புற்றுநோய் கலங்களை இலகுவாக கண்டறிய பெரும் உதவியாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனை California San Diego பல்கலைக்கழக விஞ்ஞானிகள் குழுவினரே உருவாக்கியுள்ளனர்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- உடற் கலங்களில் உண்டாகும் ஒலியை கேட்டக்கூடிய சாதனம் உருவாக்கம்!

