Posted by : Author Saturday, 18 March 2017


ஆண்கள் மற்றும் பெண்கள் ஆரோக்கியமான கருவளத்துடன் இருந்தால், தான் குழந்தை பாக்கியத்தை பெற முடியும்.

அந்த வகையில் ஒரு ஆண் ஆரோக்கியமான கருவளத்துடன் உள்ளாரா என்பதை எப்படி கண்டுபிடிப்பது என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.

ஆண்கள் கருவளத்தை சோதிப்பது எப்படி?

  • ஒரு ஆணின் விந்தணு அடர்த்தியாக, பிசுபிசுப்புத் தன்மையுடன் விந்தணுக்களின் எண்ணிக்கை அதிகமாக இருந்தால், அவரின் கருவளம் ஆரோக்கியமாக உள்ளது என்று அர்த்தமாகும்.
  • ஒருவருக்கு கருவளம் குறைவாக இருப்பதை அவருடைய வயிற்றுப் பகுதியில் உள்ள கொழுப்பை வைத்து தீர்மானித்து விடலாம். எப்படியெனில் அளவுக்கு அதிகமான தொப்பை உள்ளவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன் ஹார்மோன் குறைவாக இருக்கும்.
  • சிறுநீர்ப்பைக் குழாய் என்பது ஆணுறுப்பின் நுனியில் இருக்கும் துளையாகும். அதன் வழியே தான் விந்தணு வடிதல் நடைபெறுகிறது. எனவே ஆணுறுப்பின் தலை பாகத்தின் நுனியில் துளை இருக்க வேண்டும்.
  • ஒரு ஆணின் ஆண்விதைகளில் தான் விந்தணு சுரக்கிறது. எனவே அது எவ்வளவு தூரம் பெரிதாக இருக்கிறதோ அந்தளவுக்கு விந்தணுக்களின் எண்ணிக்கையும் இருக்கும். அதுவே வால்நட் அளவில் இருந்தால், கருவளமும் நன்றாக இருப்பதற்கான அறிகுறியாகும்.
  • ஒரு ஆணின் முகம், அக்குள் மற்றும் இனப்பெருக்க உறுப்பை சுற்றி அதிகமான முடி வளர்ந்திருந்தால் அவர்களுக்கு டெஸ்டோஸ்டிரோன்களின் அளவு வளமையாக இருக்கிறது என்ற அர்த்தமாகும்.
  • ஒரு ஆணின் விந்தணு எண்ணிக்கை அல்லது வெளியேறும் அளவு குறைவாக இருந்தால், அந்த ஆண்களின் கருவளத்தில் பிரச்சனை உள்ளது என்று அர்த்தமாகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -