Posted by : Author
Friday, 31 March 2017
உடலுக்கு மிக முக்கியமான சத்து இரும்பு சத்தாகும். ஆனால் அளவுக்கு அதிகமான இரும்பு சத்து கூட ஆபத்தினை விளைவிக்கும்.
உடலில் சேரும் அளவுக்கு அதிகமான இரும்பு சத்தானது கல்லீரலை பாதிக்கிறது. மேலும், எலும்பு இணைப்புகள், உடலின் மற்ற உறுப்புகளை சேதம் அடைய செய்கிறது.
அதிகப்படியான இரும்பினால் ஏற்படும் நோய்கள் 40 வயதிற்கு பின்னரே தெரிய வருகிறது.
பெண்களுக்கு மாதவிடாய், பிரசவம் போன்றவற்றின் போது இரத்த வெளியேறும்போது அதிகப்படியாக உள்ள இரும்பும் வெளியேறுகிறது.
ஆனால் ஆண்களுக்கு அதிகப்படியான இரும்பானது எலும்பு இணைப்புகள், உடல் உறுப்புகளில் படிந்து விடுவதால் அந்த உறுப்புகள் செயலிழக்க துவங்குகின்றன.
உடலில் இரத்தமாற்றுதல் மற்றும் நோய் தொற்றினால் கூட இந்த பாதிப்புகள் ஏற்படலாம்.
அதிகப்படியான இரும்பு சத்தினை உடையவர்கள் நீரிழிவு நோய், இதயநோய், கல்லீரல் பாதிப்பு, ஆண்மையின்மை போன்றவற்றினால் பாதிக்கப்பட்டு இருப்பர்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- அதிகளவான இரும்பு சத்தும் ஆபத்தே- எச்சரிக்கை ரிப்போர்ட்...

