Posted by : Author
Friday, 10 February 2017
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் நான்கு கால்கள் மற்றும் இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்த குழந்தைக்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு இரண்டு கால்கள் மற்றும் ஒரு பிறப்புறுப்பானது வெற்றிகரமாக நீக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவின் ராய்ச்சூர் மாவட்டம் புலந்தின்னி கிராமத்தை சேர்ந்தவர்கள் சென்னபசவா- லலிதம்மா தம்பதியினருக்கு கடந்த மாதம் 21 ஆம் திகதி ஆண் குழந்தை பிறந்துள்ளது.
இக்குழந்தைக்கு நான்கு கால்கள் மற்றும் இரண்டு பிறப்புறுப்புகள் இருந்துள்ளன. இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, குரோமோசோம் குறைபாட்டினால் இதுபோன்ற குழந்தைகள் பிறக்கின்றன.
அதாவது, ஒரு பெண் கர்ப்பமாக இருக்கும்போது இரட்டை குழந்தைகள் உருவாகி, ஒரு குழந்தையின் கரு சிதைந்துபோகும் நிலையில், அதன் உறுப்புகளின் வளர்ச்சி இருக்கும்.
இந்த உறுப்புகளானது கருவுக்குள் இருக்கும் மற்றொரு குழந்தையின் உடல் பாகங்கேளோடு சேர்ந்து வளர்ந்துவிடுகிறது, இதனால் தான் இதுபோன்ற பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று மருத்துவர் சஞ்சய் ராவ் கூறியுள்ளார்.
இந்நிலையில் 20 மருத்துவர்கள் அடங்கிய குழுவானது இக்குழந்தைகக்கு அறுவை சிகிச்சை மேற்கொண்டு, உடலில் இருந்து இரண்டு கால்கள் மற்றும் ஒரு பிறப்புறுப்பினை வெற்றிகரமாக அகற்றியுள்ளார்கள்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- நான்கு கால்கள், இரண்டு பிறப்புறுப்புகளுடன் பிறந்த குழந்தை: வெற்றிகரமாக அறுவை சிகிச்சை

