Posted by : Author
Tuesday, 28 February 2017
தமனிகளில் ஏற்படும் அடைப்புகள் காரணமாக இதயம் தொடர்பான மாரடைப்பு, போன்ற நோய்கள் ஏற்படுகிறது.
இதனால் இதயத்திற்கு செல்லும் ரத்த ஓட்டம் குறைந்து, பல்வேறு இதய நோய்களால் அவஸ்தைப்பட நேரிடுகிறது.
எனவே இதயத்தின் ரத்த ஓட்டத்தை சீராக்கி, இதய நோய்களை தடுப்பதற்கு, அருமையான ஜூஸ் இதோ!
தேவையான பொருட்கள்
உலர் திராட்சை - 1 கப்
இஞ்சி - 2 டேபிள் ஸ்பூன்
தேன் - 2 டேபிள் ஸ்பூன்
க்ரீன் டீ - 4 டேபிள் ஸ்பூன்
தண்ணீர் - 1 லிட்டர்
செய்முறை
முதலில் ஒரு பாத்திரத்தில் நீரை ஊற்றி குறைவான தீயில் கொதிக்க வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் அந்த நீரில் உலர் திராட்சை, துருவிய இஞ்சி, தேன் மற்றும் க்ரீன் டீ ஆகியவற்றை சேர்த்து, நன்கு கலக்க வேண்டும்.
பின் ஒரு உல்லன் துணியால் அந்த பாத்திரத்தை மூடி 8 மணி நேரம் ஊற வைத்தால், சுவையான சத்தான ஜூஸ் ரெடி.
குடிக்கும் முறை
இந்த பானத்தை தினமும் இரண்டு வேளைகள் உணவு சாப்பிடுவதற்கு முன் 200 மிலி அளவு குடிக்க வேண்டும்.
நன்மைகள்
உலர் திராட்சையில் கரையக்கூடிய, கரையாத நார்ச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பொட்டாசியம் ஆகிய சத்துக்கள் அதிகம் உள்ளதால், இது நமது உடம்பின் கொலஸ்ட்ரால் அளவை சீராக்கி, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
தமனிகளில் உள்ள அடைப்புக்கள் மற்றும் கல்லீரலை சுத்தம் செய்து, உடலின் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலிமைப்படுத்தி, நோய் தொற்றுக்களை எதிர்த்துப் போராடுகிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- மாரடைப்பை தடுக்கும் அற்புதமான பானம்: கட்டாயம் குடியுங்கள்...

