Posted by : Author Friday, 27 January 2017


லட்சணம் எனும் போது, அது பெண்களை பற்றி கூறுவதை மட்டும் தான் நாம் அனைவரும் பேசக் கேட்டிருப்போம்.

ஆனால் ஆண்களுக்கும் ஒருசில குணங்கள் மற்றும் அவர்களின் அங்கங்களை வைத்து, அவர்களின் லட்சணத்தை பற்றிக் கூறுவார்கள் என்பது உங்களுக்கு தெரியுமா?

ஆண்களிடம் இருக்கும் லட்சணம் என்பது என்ன?
  • ஆண்களின் நெற்றி நன்கு அகலமாகவும், உயர்ந்தும் இருந்தால், அவர்களிடம் அறிவும், செல்வமும் அதிகம் இருக்கும். சிறிய நெற்றியைக் கொண்டவர்கள் சற்று புத்தி மழுங்கியவர்களாக இருப்பர். அதுவே நெற்றியில் ரேகைகள் தெரிந்தால் அவர்களிடம் அதிர்ஷ்டம் அதிகம் உண்டு. ரேகைகள் இல்லாவிட்டால் ஆயுள் குறைவாக இருக்கும்.
  • ஆண்களின் கண்கள் அகலமாகவும், சிவப்பாகவும் இருந்தால், அவன் உலகையே ஆளும் திறன் கொண்டிருப்பான். அதுவே சிறிய கண்ணோ கொண்டிருந்தால், அவர்களிடம் அறிவும், ஆற்றலும் சற்று குறைவாக இருக்கும்.
  • பெரிய மூக்கு இருக்கும் ஆண்கள் செல்வம், பதவி, புகழ் என்று இருப்பார்கள். சிறிய மூக்கைக் கொண்டவர்கள் ஆன்மீகத்தின் மீது நம்பிக்கை கொண்டவர்களாகவும், கருணை உள்ளம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
  • ஒரு ஆணிண் வாய் சிறியதாக இருந்தால், அவர்கள் கருணை உள்ளமாக இருப்பதோடு, மிகவும் புத்திசாலியாக, புகழ் பெற்றவர்களாக இருப்பார்கள். அதுவே வாய் பெரியதாக அகன்று இருந்தால், அவர்கள் வெறும் வாய்ப் பேச்சு மட்டுமின்றி, எப்போதும் மற்றவரிடம் குற்றம் காண்பவர்களாக இருப்பார்கள்.
  • நீளமான நாக்கைக் கொண்ட ஆண், நல்ல பேச்சாளராக இருப்பான். நாக்கில் கரும்புள்ளிகள் இருந்தால், அவர்கள் சொல்வதெல்லாம் பலிக்கும். நாக்கு சிவப்பாக இருந்தால் அவர்கள் மிகவும் அதிர்ஷ்டக்காரர்கள்.
  • பற்கள் சிறியதாகவும், வரிசையாகவும் இருந்தால், கல்வியில் சிறந்தவர்களாக இருப்பர். கூர்மையான பற்களை உடையவர்கள் அதிக கோபம் படுபவர்கள். அதுவே பற்கள் வரிசையாக இல்லாமல் முன்னும், பின்னும் இருந்தால், அவர்கள் தந்திரமானவர்களாக இருப்பார்கள்.
  • ஆண்களின் உதடுகள் சிறியதாகவும், சிவப்பாகவும் இருந்தால், அவர்களிடம் நல்ல அந்தஸ்து மற்றும் அதிகாரம் நிலைத்து இருக்கும். அதுவே உதடு கருமையாக, தடித்து இருந்தால் அவர்கள் பல கஷ்டங்களை சந்திப்பவராக இருப்பார்கள்.
  • கன்னங்களின் மேல் பகுதி உயர்ந்து இருந்தால், சுயநலமிக்கவர்களாக இருப்பர். சிரிக்கும் போது அல்லது பேசும் போது கன்னங்களில் குழி விழுந்தால், செல்வந்தர்களாகவும், அதிர்ஷ்டமிக்கவர்களாகவும் இருப்பர். அதுவே கன்னங்கள் மிகவும் பரந்து, தசைப்பகுதி மிக்கவர்களாக இருந்தால், நல்ல ஆட்சியாளராகவும், செல்வந்தராகவும் இருப்பார்கள்.
  • ஒரு ஆணின் தாடை நீளமாக இருந்தால், சிறந்த பேச்சாளராக இருப்பர். அதுவே தாடையில் முடி நன்கு அடர்த்தியாக வளர்ந்து இருந்தால், அவர்கள் சற்று சுயநலமிக்கவர்களாக இருப்பார்கள்.
  • ஒரு ஆணுக்கு தோள்பட்டைகள் உயர்ந்து இருந்தால், அவரிடம் செல்வம் கொழிக்கும். சமமாக இருந்தால் அறிவானவர்களாக இருப்பர். அதுவே தாழ்ந்து இருந்தால் நீண்ட ஆயுளைக் கொண்டவர்களாக இருப்பார்கள்.
  • ஒரு ஆணுக்கு மார்பு பகுதி அகலமாகவும், நல்ல தசைப் பிடிப்போடும் இருந்தால், அவர்கள் தான் இருக்கும் இடத்தில் நல்ல புகழ் பெற்றவனாக இருப்பார். அதுவே மார்பு பகுதியில் ரோமம் இல்லாமல் இருந்தால், அவர்கள் மிகவும் கஷ்டங்களை அனுபவிப்பவராக இருப்பார்கள்.
  • நீளமான விரல்களைக் கொண்ட ஆண்களுக்கு கலை ஆர்வம் அதிகம் இருக்கும். விரல்களுக்கு இடையே அதிகப்படியான இடைவெளி இருந்தால் அது தரித்திரமாகும். அதுவே உள்ளங்கையில் குழி அதிகம் விழுந்தால், அவர்களின் ஆயுள் காலம் மிகவும் குறைவாக இருக்கும்.
  • முழங்கால் வரை நீளமான கைகளைக் கொண்ட ஆண்கள் ராஜ வாழ்க்கை வாழ்வார்கள் மற்றும் நல்ல கல்வியறிவைக் கொண்டவர்களாக இருப்பர். அதுவே குட்டையான கைகளைக் கொண்ட ஆண்களை நம்பக் கூடாது.
 



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -