Posted by : Author
Saturday, 7 January 2017
நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் நட்ஸ் வகைகளில் ஒன்றான நிலக்கடலை, அனைவருமே விரும்பும் ஒரு சிறந்த உணவுப் பொருளாகும்.
இந்த நிலக்கடலை பாலை தினமும் குடித்து வந்தால், அது சுவையாக இருப்பதோடு, நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் மிகவும் முக்கிய பங்கு வகிக்கிறது.
எனவே நிலக்கடலையில் பால் தயாரிப்பது எப்படி? அதனால் கிடைக்கும் நன்மைகள் என்ன? என்பதை பற்றி தெரிந்துக் கொள்வோம்.
தேவையான பொருட்கள்
நிலக்கடலை - 1 கப்
முந்திரி - 5
ஏலக்காய் - சிறிதளவு
செய்முறை
நிலக்கடலை மற்றும் முந்திரியை ஒரு நாள் முழுவதும் தண்ணீரில் ஊற வைக்க வேண்டும்.
பின் இந்த நிலக்கடலையை ஒரு துணியில் கட்டி, அதோடு ஊற வைத்த முந்திரியையும் சேர்த்து, முளைக்கட்ட விட வேண்டும்.
முளைக்கட்டிய நிலக்கடலை மற்றும் முந்திரியை நன்றாக அரைத்து, அதனுடன் சிறிது ஏலக்காய் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
இப்போது சுவையான ஆரோக்கியமான நிலக்கடலைப் பால் ரெடி.
நிலக்கடலை பால் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்
நிலக்கடலைக்கு அனைத்து விதமான ரத்தக் கசிவை தடுக்கும் ஆற்றல் உள்ளது. எனவே பெண்கள் மாதவிடாய் காலத்தில் நிலக்கடலை பாலைக் குடித்து வந்தால், அதிக அளவில் ஏற்படும் ரத்தப்போக்கைத் தடுக்கிறது.
நிலக்கடலையில் பாஸ்பரஸ், கால்சியம், இரும்புச்சத்து, விட்டமின் E, நியாசின் போன்ற சத்துக்கள் அதிகமாக உள்ளது. இதனால் நமது மூளை சுறுசுறுப்பாகவும், எலும்புகள் வலிமையாகவும் இருக்க வைக்கிறது.
நிலக்கடலையில் இருக்கும் நியாசின் புண்கள் மற்றும் கொப்புளங்கள் வராமல் தடுப்பதோடு, நமது சருமத்தைப் பளபளப்போடு வைத்துக் கொள்கிறது.
உடல் பருமன் அதிகமாக உள்ளவர்கள், சாப்பிடுவதற்கும் ஒரு மணி நேரத்திற்கு முன் 1 கைப்பிடி அளவு வறுத்த நிலக்கடலையை சாப்பிட வேண்டும். ஏனெனில் இது நாம் அதிக அளவில் உணவுகளை சாப்பிடுவதை தடுத்து, உடல் பருமனையும் குறைக்கிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை »
- நிலக்கடலை பாலில் நமக்கு கிடைக்கும் நன்மைகள் எவ்வளவு தெரியுமா?

