Posted by : Author
Friday, 27 January 2017
நமது உடம்பில் இதயம் மற்றும் மூளைக்கு அடுத்தபடியாக இருக்கும் உறுப்புகளில் மிகவும் முக்கியமானது கல்லீரல்.
நமது உடம்பின் முக்கியமான உறுப்புகளில் ஒன்றான கல்லீரல் சர்க்கரை, கொழுப்பு, இரும்புச்சத்து ஆகியவற்றைக் கட்டுப்படுத்தி, புரத உற்பத்தியை தூண்டுவதில் மிக முக்கியமான பங்கை வகிக்கிறது.
எனவே நமது உடம்பின் ஒட்டுமொத்த செயல்பாடுகளையும் செய்யும் கல்லீரலின் ஆரோக்கியத்தை மேமப்டுத்துவதற்கு, இந்த உணவுகளை தினமும் தவறாமல் சாப்பிடுங்கள்.
கேரட் மற்றும் பீட்ரூட்

கேரட் மற்றும் பீட்ரூட்டில் உள்ள க்ளுடோதயோன் என்ற புரோட்டின்கள் கல்லீரலில் தங்கி இருக்கும் நச்சுக்களை அகற்றி, கல்லீரலின் செயல்திறனை அதிகப்படுத்துகிறது. எனவே கேரட் மற்றும் பீட்ரூட்டை வாரம் தவறாமல் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
கீரை வகைகள்

கீரை வகையில் நார்ச்சத்துக்கள், விட்டமின்கள், இரும்புச்சத்துக்கள் அதிகமாக நிறைந்துள்ளது. எனவே கீரை வகையில் ஏதேனும் ஒரு கீரையை தினமும் நாம் சாப்பிடும் உணவில் சேர்த்துக் கொண்டால் அது நமது உடம்பில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கல்லீரலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
முட்டைக்கோஸ்

முட்டைக்கோஸ் நமது உடம்பில் இருக்கும் கல்லீரலை நச்சுக்களிலிருந்து பாதுகாக்கும் வேலையை செய்கிறது. அதில் உள்ள சல்ஃபர் கல்லீரலில் உள்ள என்சைம்களை சுரப்பதற்கு ஊக்குவிக்கும் பணியைச் செய்கிறது.
திராட்சை

திராட்சை பழமானது, நமது கல்லீரலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கச் செய்து, நமது உடலில் உள்ள நச்சுக்களை வெளியேற்றி, கிருமிகளுக்கு எதிராக செயல்படும் தன்மை திட்ராசை பழத்தில் உள்ளது.
ஆப்பிள்
ஆப்பிள் பழத்தில் இருக்கும் சத்துக்கள், நமது கல்லீரலை சுத்தப்படுத்தி, அது செய்யும் வேலையை பாதியாய் குறைக்கும் சக்தி ஆப்பிள் பழத்தில் உள்ளது. எனவே தினமும் ஒரு ஆப்பிள் பழத்தினை சாப்பிட்டு வந்தால், மிகவும் நல்லது.
பூண்டு

கல்லீரலை சுத்தப்படுத்தும் உணவுப் பொருட்களில் மிகவும் சிறந்த ஒரு உணவுப் பொருள் தான் பூண்டு. இதிலுள்ள அலிசின் மற்றும் செலினியம் ஆகிய இரண்டும் புற்றுநோய் செல்களை எதிர்த்து போராடி, கல்லீரலில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கிறது.
வால்நட்
நமது உடலுக்கு தேவையான அமினோ அமிலங்கள், க்ளுடோதயோன், ஒமேகா 3 ஃபேட்டி ஆஸிட் போன்ற அனைத்து சத்துக்களும் வால் நட்டில் உள்ளது. மேலும் இது கல்லீரலின் என்சைம்களை தூண்டி, ஜீரண வேலைகளை துரிதப்படுத்தும் பணியைச் செய்கிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கிய வாழ்வு »
- கல்லீரலை சுத்தப்படுத்த இந்த அற்புதமான உணவுகளை சாப்பிடுங்கள்!

