Posted by : Author
Saturday, 7 January 2017
போட்டதே தெரியாமல் லிப்ஸ்டிக் போட்டால் தான் நன்றாக இருக்கும். அதனால் தான் நிறமில்லாமலும், லைட் பிங்க், இளம் ஆரஞ்ச போன்ற மெல்லிய நிறங்களிலும் வரும் லிப் பாம்களின் அன்றாட பயன்பாடு அதிகரித்தது.
தற்போது அது மாறி "ஸ்மோக்கி லிப்ஸ்" பெண்கள் மத்தியில் டிரெண்டாகி வருகிறது. ஸ்மோக்கி என்றால் அடர்த்தியானது என்று அர்த்தம்.
பங்கியாண உடையணியும் பெண்கள் ஸ்மோக்கி லிப்ஸ்டிக் மேக்கப்பை சிறந்த பொருத்தமான ஒப்பனையாக கருதுகின்றனர். கண்களுக்கு அளிக்கும் கண் மையின் அடர்த்தியை குறைத்து, உதட்டை ஹைலைட் செய்வது அல்லது கண்கள் மற்றும் உதடுகள் இரண்டையும் அடர்த்தியாக ஒரே நேரத்தில் மேக்கப் செய்கின்றனர்.
இந்த மேக்கப் உடைகளுக்கு ஏற்ப தெரிவு செய்யப்படுகிறது. ஸ்கர்ட், கவுன், பென்சில் ஸ்கர்ட் போன்ற வெஸ்டர்ன் ஆடைகளுக்கு ஸ்மோக்கி லிப்ஸ் சிறப்பானதாக இருக்கும்.
பாலிவுட் நடிகைகளான பிரியங்கா சோப்ரா, ஐஸ்வர்யா ராய் போன்றவர்கள் ஸ்மோக்கி உதடுகளை அதிகம் விரும்பி, அடிக்கடி இந்த மேக்கப்பை போட்டுக்கொள்கின்றனர்.
Related Posts :
- Back to Home »
- அழகுக்கு குறிப்புகள் »
- ஸ்ஸ்ஸ்....ஸ்மோக்கி உதடுகள் வேண்டுமா?

