Posted by : Author
Saturday, 17 December 2016
அன்றாடம் நாம் பயன்படுத்தும் கறிவேப்பிலையில் நீர்ச்சத்து, மாவுச்சத்து, நார்ச்சத்து, புரதம், தாது உப்புக்கள், கொழுப்ச்சத்து, சுண்ணாம்புச்சத்து, மக்னீசியம், இரும்புச்சத்து, தாமிரச்சத்து, கந்தகச்சத்து, குளோரின், ஆக்சாலிக் ஆசிட் போன்ற பல ஆரோக்கியமான சத்துக்கள் நிறைந்துள்ளது.
இதனால் கறிவேப்பிலையை நாம் தொடர்ந்து கறிவேப்பிலையை பச்சையாகவோ அல்லது ஜூஸ் செய்து சாப்பிட்டால், தலைமுடி நன்கு கருமையாகவும், அடர்த்தியாகவும் வளருவதுடன், நமது உடலில் சேருகின்ற அதிகப் படியான கொழுப்பையும் கரைக்கிறது.
கறிவேப்பிலையின் ஜூஸ் தரும் நன்மைகள்
- ஆயுர்வேத மருத்துவத்தில், உடல் எடையைக் குறைக்க விரும்புவோர்களுக்கு, கறிவேப்பிலை பரிந்துரைக்கப்படுகிறது. எனவே நாம் கறிவேப்பிலையை பச்சையாக ஜூஸ் செய்து குடித்தால், நல்ல பலன் கிடைக்கும்.
- நமது உடம்பில் செரிமான பிரச்சனை இருந்தால், கெட்ட கொழுப்புக்கள் அப்படியே வயிற்றில் படிந்து உடல் பருமன் பிரச்சனையை ஏற்படுத்தும் இதனால் காலையில் வெறும் வயிற்றில் கறிவேப்பிலை ஜூஸ் குடித்தால், உடல் பருமன் பிரச்சனை வராமல் தடுக்கிறது.
- கறிவேப்பிலை நமது உடலை சுத்தம் செய்து, உடலில் உள்ள நச்சுமிக்க பொருட்களை வெளியேற்றி, நமது உடலின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது.
- தினமும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் 10 கறிவேப்பிலையை வாயில் போட்டு மென்று சாப்பிடலாம் அல்லது ஒரு கையளவு கறிவேப்பிலையை எடுத்து மென்மையாக அரைத்து, ஒரு டம்ளர் நீரில் கறிவேப்பிலை மற்றும் தேன் சேர்த்து கலந்து குடித்தால் நல்ல பலன் கிடைக்கும்.