Posted by : Author
Saturday, 10 December 2016
Placoderms எனப்படும் பழமை வாய்ந்த ஒருவகை மீனினமே, மனிதன் உட்பட கிட்டத்தட்ட எல்லா முள்ளந்தண்டுளிகளின் மூதாதையாக பார்க்கப்படுகிறது.
மேற்படி இனம் கிட்டத்தட்ட 360 மில்லியன் வருடங்களுக்கு முன்பு அழிந்து போகும் வரையில், 70 மில்லியன் ஆண்டுகளாக கடல் சூழலில் ஆதிக்கம் செலுத்தியிருந்தது.
இவ்வகை மீன்களே தற்போதைய என்பு மீன்களினதும், கசியிழைய மீன்களினதும் வாழ்க்கைக்கு வழிவகுத்திருக்கின்றன.
பண்டைய முள்ளந்தண்டுளிகள் தாடைகளற்றனவாக இருந்தன. அக்காலத்தில் placoderms இனங்களே தாடைகொண்ட இனங்களாக வெளிப்பட்டன.
இது அவைகளின் சடுதியான வெற்றிமுறைக்கு வழிவகுத்தது.
இதுவரை பல்வேறு விவாதங்கள், மேற்படி placoderms இனங்கனே தற்போதைய தாடை கொண்ட மீன்கள், பாலூட்டிகள், பறவைகள், நகருயிர்கள், ஈரூடக வாழிகள் மற்றும் பல்வேறு வகையான மீன்களின் மூதாதையாக இருக்கலாம் என விவாதிக்கப்பட்டிருந்தது.
ஆனால் தற்போது மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்று, placoderms இனத்தின் கூர்ப்பு விசித்திரமான மரண முடிவை தழுவியிருந்தமை வெளிக்கொணரப்பட்டுள்ளது.
இவ் ஆய்வு Systematic Biology எனும் ஆய்வுப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இப் புதிய ஆய்வில் குறித்த இனம் முள்ளந்தண்டுளிகளின் கூர்ப்பில் ஒரு பக்கக் கிளையாகவே பார்க்கப்படுகிறது.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- விஞ்ஞானிகளின் கருத்துக்களுக்கு சவால்விடும் புதுவகை கூர்ப்பு மரம்!

