Posted by : Author
Friday, 30 December 2016
வாயை திறந்தவாறு தூங்கும் போது எச்சில் வறட்சியடைவதோடு, அது பற்களையும் பாதிக்கிறது.
இயற்கையாகவே எச்சிலானது, வாயில் அமில உற்பத்தியை அதிகரிக்கும் பாக்டீரியாக்களை அழிக்கும்.
தூங்கும் போது வாயை திறந்தவாறு தூங்குவதால் வாயில் அமில அளவுகள் அதிகரித்து, பல் அரிப்பு மற்றும் பற்கள் சொத்தையாகஆரம்பமாகும்.
பொதுவாக வாயில் எச்சில் குறைவாக சுரக்கும் போது, பாக்டீரியாக்களால் உற்பத்தி செய்யப்படும் அமில அளவுகள் அதிகரித்து, பற்கள் வேகமாக சொத்தையாகும்.
எனவே நேராக படுப்பதைத் தவிர்த்து, இடது பக்கமாக தூங்கும் பழக்கத்தைக் கொள்ளுங்கள். இதனால் வாயை திறந்தவாறு தூங்குவதைத் தவிர்ப்பதுடன், பற்கள் பாதிப்படைவதையும் தடுக்கலாம்.