Posted by : Author Saturday, 31 December 2016


உங்கள் கண்களில் ஏதோ நுண்ணிய புழுக்கள் நெளிவதைப் போல உணர்ந்திருப்பீர்கள். அது என்ன,ஏன் இப்படி கண்களில் தோன்றுகிறது என்று கேள்விகள் உங்கள் மனதில் தோன்றியது உண்டா. அதற்கான பதில் இதோ.

உங்கள் கண்களில் அவ்வப்போது திடீரென ஏதோ நுண்ணிய புழு போல ஏதோ நெளிவது போல தெரியும். கண்களை கசக்கினாலோ, அல்லது பார்வையை வேறுபுறம் அகற்றினாலே அது சற்று நேரத்தில் மறைந்துவிடும். இதன் பெயர் முஸ்காய் வாளிடான்டஸ்.

இது கண்களில் தோன்றுவது மிகவும் இயல்பானது. இது ஏதோ கிருமி அல்லது நச்சு அல்ல. இது வெளிப்புற ஆர்கன் அல்ல. இது நமது கண்களின் உட்புறத்தில் இருக்கும் ஒன்று தான்.

இது உருவ மாற்றம் ஏற்படுத்திக் கொண்டிருப்பது போன்ற காட்சியளிக்கும். ஆனால், இவற்றுக்கு உயிரல்ல. கண்களுக்கு பின்னால் லைட் சென்ஸிடிவ் திசுவாக இது இருக்கிறது.

இதன் உருவாக்கம் ஒருவகையான திசு, இரத்த அணுக்கள் மற்றும் புரதம் கொண்டு உருவானதாய் அறியப்படுகிறது. இவை கண்களின் அசைவிற்கு ஏற்ப அங்கும், இங்கும் பவுன்ஸ் ஆகும் தன்மை கொண்டுள்ளன.

ரெட்டினாவிற்கு தொலைவில் இருக்கும் போது இது பெரிதாக தென்படாது. ஆனால் அதுவே ரெட்டினாவிற்கு அருகில் சென்றால் அது கண்களுக்கு புலப்படும்.
மிக ஒளிமிகுந்த தளங்களில் உதாரணமாக கம்பியூட்டர் திரை, தெளிவான நீல வானம் போன்றவற்றை நீங்கள் கண்ணெடுக்காமல் பார்த்துக் கொண்டிருக்கும் போது இது தென்படும்.

சில சமயங்களில் மிகுந்த ஒளியுடன் எதையாவது கூர்ந்து கவனித்து கொண்டிருக்கும் போது, கண்முன்னே ஏதோ குட்டி, குட்டி ஒளி நட்சத்திரங்கள் போல தோன்றும். இவை ப்ளூ ஃபீல்ட் என்டோபிக் ஃபினாமெனன் (Blue Field Entopic Phenomenon) என அழைக்கப்படுகிறது.

இது ஒரு நேர் எதிரானவை என்று கூறப்படுகிறது. இதுவும், ஒளியின் மிகுதியான செயல்பாட்டின் போது வெள்ளை அணுக்களின் இடர்பாடுகள் காரணமாக கண்களுக்குள் உண்டாகும் ஒரு செயல் தான்

ஒரு வேளைமுஸ்காய் வாளிடான்டஸ் மிகப்பெரிய அளவில் தென்பட ஆரம்பித்தால் நீங்கள், மருத்துவரிடம் பரிசோதனை செய்துக்கொள்வது நல்லது. இது ஏதேனும் அபாயமாக கூட இருக்கலாம்.




Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -