Posted by : Author Saturday, 24 December 2016


கொழுப்புகள் பொதுவாக நம்முடைய வயிறு, கை, தொடை போன்ற பகுதிகளில் அதிகமாக இருப்பது மிகவும் இயல்பானது.

ஆனால் சிலருக்கு முகத்தில் இருக்கும் தாடைக்கு கீழ் பகுதியிலும், கழுத்திலும் கொழுப்புகள் அதிகமாக சேர்ந்திருக்கும்.

எனவே இவ்வாறு தாடையில் இருக்கும் அதிகப்படியான கொழுப்புகள், ஒருவரின் அழகை கெடுக்கும் வகையில் அமைந்திருக்கும்.

இது போன்ற பிரச்சனைகளை போக்குவதற்கு, ஒருசில எளிய பயிற்சிகளே போதுமானது.

முகத்தின் தாடையில் இருக்கும் கொழுப்பை குறைப்பது எப்படி?

  • நமது முகத்தின் வடிவத்தில் மரபணுக்கள் தான் பெரும் முக்கிய பங்கினை வகிக்கிறது. முகத்தில் இருக்கும் கொழுப்பைக் குறைப்பதற்கு, அதிகப்படியான கலோரிகள் நிறைந்த உணவு சாப்பிடுவதை குறைக்க வேண்டும். மேலும் இதை சரியாக பின்பற்றினால் நமது கழுத்தில் உள்ள கொழுப்புகள் குறைந்து விடும்.
  • சூயிங்கம் மெல்லுவது தவறான அணுகு முறையாக இருந்தாலும், அது தாடைக்கும், வாயிக்கும் ஓரு சிறந்த பயிற்சியாகும். இதனால் நமது தாடையின் கீழ் பகுதியில் தொங்கிக் கொண்டிருக்கும் கொழுப்பை குறைக்க உதவுகிறது.
  • நமது உடலில் இருக்கும் நீரின் அளவை சமநிலையில் பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். ஏனெனில் இதனால் நமது சருமத்தில் உள்ள சுருக்கம், தொய்வுற்றல் போன்ற பிரச்சனைகள் ஏற்படாமல் இருக்கிறது. எனவே, தினமும் சீரான இடைவேளையில் மூன்று லிட்டர் நீர் பருக வேண்டும்.
  • நாம் உறங்கும் போது பெரிய அளவிலான தலையணையை பயன்படுத்தும் பழக்கத்தை தவிர்க்க வேண்டும். ஏனெனில் இதனால் கழுத்து மற்றும் தண்டுவடம் போன்ற பகுதிகளில் அழுத்தம் ஏற்படுத்துவது தவிர்க்கப்பட்டு, அதிகமான கொழுப்புகளும் குறைக்கப்படுகிறது.
  • நமது மனம், உடல் ஆகிய இரண்டையும் பேணிக்காக்க உதவும் ஒரு சிறந்த பயிற்சியாக யோகா உள்ளது. மேலும் இது போன்ற சில ஆசனங்கள் கழுத்து, கண்ணம், தாடை போன்ற பகுதிகளில் இருக்கும் கொழுப்பை குறைக்க சிறந்த பயிற்சியாகும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -