Posted by : Author
Friday, 11 November 2016
ஆயிரக்கணக்கில் பணம் கொடுத்து வாங்கிய உடையானாலும், அது உங்களுக்கு அழகாக இல்லாவிட்டால், யாருமே உங்களைத் திரும்பிப் பார்க்க மாட்டார்கள்.
யார் யாருக்கு என்ன நிறம் பொருந்தும், எந்த மாதிரி சந்தர்ப்பங்களுக்கு என்ன நிறம் உடுத்தலாம்? இது பற்றிய மிக சுவாரசியமான தகவல்கள்.
முதலில் உங்கள் பிறந்த திகதியை வைத்து, உங்களுக்கான நிறத்தை நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.
உதாரணத்துக்கு உங்கள் பிறந்த நாள் 09.08.1994 என வைத்துக் கொள்ளுங்கள்.
09 08 1 9 9 4
=40
=4 0
=04
04 என்பது பச்சை நிறத்துக்கான எண்
இப்படி 1 முதல் 9 வரையிலான எண்களுக்கு ஒவ்வொரு நிறம் உண்டு.
சிகப்பு
ஆரஞ்சு
மஞ்சள்
பச்சை
நீலம்
இண்டிகோ
ஊதா
வெள்ளி
பிங்க்
1-சிகப்பு- தன்னிச்சையானவர்கள், ஆதிக்க குணம் உடையவர்கள். சவால் விரும்பிகள், எதிலும் சுயமான முடிவையே எடுப்பவர்கள்.
2-ஆரஞ்சு- சுறுசுறுப்புத் திலகங்கள். வெற்றி இவர்களை விடாது விரட்டும். புதிய சிந்தனை உடையவர்கள்
3-மஞ்சள்- தோழமையானவர்கள். சந்தோஷ மானவர்கள். பாசிட்டிவ் குணமுடையவர்கள்.
4-பச்சை - பழமைவாதிகள், புத்திசாலிகள், நேர்மையானவர்கள்.
5-நீலம்- எடுக்கிற முடிவில் உறுதியான வர்கள். மிஸ் ,ஒழுக்கம் எனப் பெயரெடுக்க விரும்புவார்கள். பொறுமையும், அமைதியும் வாய்க்கப் பெற்றவர்கள்.
6-இண்டிகோ- திருப்தியானவர்கள். பக்குவமானவர்கள், கடின உழைப்பாளிகள்.
7-ஊதா- பிறரைக் கவர்பவர்கள், தாராள குணமுள்ளவர்கள், கிரகிப்புத்திறன் அதிகம் இருக்கும்.
8-வெள்ளி- மிக உயர்ந்த அந்தஸ்தில் இருந்தாலும், ரொம்பவும் சாதாரணமாகவே இருப்பார்கள். பழக இனிமையானவர்கள்.
09- பிங்க்- மென்மையானவர்கள், அப்பாவி, இளகிய மனம் படைத்தவர்கள்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும்.... »
- உங்களைப் பற்றி உங்களுக்கே தெரியாத சுவாரஸ்யமான இரகசியம்!

