Posted by : Author
Friday, 11 November 2016
ஆட்டிறைச்சியில் உள்ள நியாசின் எனும் விட்டமின் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து ஆற்றலை மேம்படுத்தும்.
படிக்கும் குழந்தைகளுக்கு சிக்கனை விட மட்டன் கொடுத்தால் மூளையின் செயல்பாடு அதிகரிக்கும்.
மேலும் மழைக்காலங்களில் மட்டன் சூப் வைத்து கொடுத்தால் உடலுக்கு இதமாக இருக்கும்.
குறிப்பாக, ஆண்களுக்கு ஏற்ற உணவு. ஆண்கள் மட்டன் எலும்பு ரசம் வைத்து சாப்பிட்டால் அவர்களின் உடல் வலிமை அதிகரிக்கும்.
மட்டன் எலும்பு ரசம் செய்வது எப்படி என்று பார்ப்போம்,
தேவையான பொருட்கள்
மட்டன் எலும்பு - 1/2 கிலோ
தக்காளி - 100 கிராம்
சின்ன வெங்காயம் - 100 கிராம்
பச்சை மிளகாய் - 10
சீரகம், மிளகு , மஞ்சள் தூள், சோம்பு- 1 டீஸ்பூன்
பட்டை - 4
பிரியாணி இலை - 1
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
சின்ன வெங்காயம், கொத்தமல்லி, தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் மட்டன் எலும்பு மஞ்சள் தூள், சிறிது உப்பு, மற்றும் 5 டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பின்னர் கடாயில் எண்ணெய் ஊற்றி கடாய் சூடானதும் சீரகம், சோம்பு, பட்டை, பிரியாணி இலை, பச்சைமிளகாய் என அனைத்தையும் ஒவ்வென்றாக சேர்த்து நன்கு வதக்கவும்.
அதன்பின்னர் வெங்காயம் மற்றும் தாக்காளி போட்டு வதக்கவும்.
அனைத்தும் நன்றாக வதங்கியதும் வேகவைத்த ஆட்டு எலும்புகளைப் போட்டு தேவையான அளவு உப்பு சேர்த்து வேகவைக்கவும். நன்றாக வெந்ததும் கொத்தமல்லி தழை தூவி இறக்கவும்.
