Posted by : Author Friday, 25 November 2016


நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்கள் முறையான வாழ்க்கையை வாழ்ந்து வந்தால் எவ்வித பாதிப்புகளும் இன்றி ஆரோக்கிய வாழ்க்கையை வாழலாம்

நீரிழிவு நோயாளிகள் மேற்கொள்ளும் ரத்த சர்க்கரை அளவு பரிசோதனையானது, கடைசியாகச் சாப்பிட்ட உணவைப் பொறுத்து, செயல்பாடுகளை ஒட்டி, மருந்து எடுத்துக்கொண்ட நேரத்துக்கு ஏற்ப என ஏராளமான நிகழ்வுகளை பொறுத்து மாறுபடும்.

ரத்த சர்க்கரை அளவைக் அதிகரிக்கவோ, குறைக்கவோ ஏராளமான காரணங்கள் உண்டு.

ரத்த சர்க்கரை அளவு மாறுபாடுவது ஒவ்வொருவருக்கும் வேறுபடக் கூடியது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

உணவு அருந்திய உடன் புகை பிடிப்பது சிலரது வழக்கம். பொதுவாக இவர்கள் உடற்பயிற்சி செய்வதும் இல்லை. இவர்களது ரத்த சர்க்கரை அளவு நிச்சயமாக உயரத்தான் செய்யும்.

மருத்துவர் அறிவுறுத்தலை முறையாகப் பின்பற்றுகிறவர்களுக்கு ஒவ்வொரு உணவுக்குப் பிறகும் பாதுகாப்பு எல்லைக்குள் ரத்த சர்க்கரை அதிகரிக்கும்.

அடுத்த உணவு வேளைக்குள் குறைந்துவிடும். இப்படியே மாறி மாறி இருந்தாலும், ஒரே சீராக இருக்கும்.

ஆனால், ஒரு நாளைக்கு பலமுறை ரத்த சர்க்கரை அளவை சோதனை என்பது, நல்ல தீர்வை தராது. அதனால்தான் மருத்துவர்கள் குறிப்பிட கால இடைவெளிகளில் ரத்த சர்க்கரை அளவை வீட்டிலேயே பரிசோதிக்கச் சொல்கிறார்கள்.

முறையான பரிசோதனை திட்டத்தில் இருந்தாலே, கிடைக்கிற அளவீடுகளைப் பொருத்து, வாழ்க்கைமுறை மாற்றங்கள் செய்து, நீரிழிவைக் கட்டுக்குள் வைக்க முடியும்.

உணவினை குறைத்து, விரும்பிய உணவுகளை தவிர்தால் தான் சர்க்கரை அளவை குறைக்க வேண்டும் என்பதில்லை.

மாறாக, ஆரோக்கியமான சமச்சீர் உணவை குறித்த நேரத்தில் எடுத்துக் கொள்வது ரத்த சர்க்கரையை நல்ல அளவீடுகளுக்குள் கொண்டுவர நிச்சயம் உதவும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -