Posted by : Author
Sunday, 9 October 2016
பெண்களின் முக அழகை வெளிப்படுத்துவதில் உதடுகள் மிக முக்கிய பங்கு வகிக்கிறது.
ஆனால் கோடைக் காலங்கள் வந்துவிட்டால் பலரின் உதடுகள் ஈரப்பதம் இல்லாமல் வரட்சியாக மாறுவதுடன், அதனுடைய மென்மையான தன்மையும் இழந்து விடுகிறது.
இந்த பிரச்சனைகளில் இருந்து விடுபட்டு மென்மையான மற்றும் சிவப்பான உதடுகளைப் பெறுவதற்கு சூப்பரான டிப்ஸ் இதோ!
தயிர்
பால் பொருட்களில் ஒன்றான தயிரில் அதிகமான எண்ணெய் பசைகள் மற்றும் புரோட்டீன் சத்துக்கள் நிறைந்துள்ளது.
எனவே இதை தினமும் நம் உதடுகளில் தடவி வந்தால், உதடுகளில் ஏற்படும் வரட்சியைத் தடுத்து, உதடுகளை மென்மையாகவும் மாற்றுகிறது.
கற்றாழை
கற்றாழையில் இருக்கும் ஜெல்லை எடுத்து உதடுகளில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இதனால் உதடுகள் மென்மையாகி, நிறமும் இளஞ்சிவப்பாக மாற்றுகிறது.
தேன்
தேனில் உள்ள சத்துக்கள் சருமத்தில் ஈரப்பசையை தக்க வைக்கும் சக்தி கொண்டது.
எனவே சிறிதளவு தேனை எடுத்து, உதடுகளில் தடவி 5 நிமிடம் மசாஜ் செய்து, பின் 15 நிமிடம் ஊற வைத்து குளிர்ச்சியான நீரில் கழுவ வேண்டும்.
ஆலிவ் மற்றும் பாதாம் எண்ணெய்
ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக கலந்து, தினமும் இரவில் படுக்க போவதற்கு முன்பு உதடுகளுக்கு தடவி வர வேண்டும்.
இதனால் உதடுகளின் வரட்சி நீங்கி மென்மையாக ஈரப்பதத்துடன் இருக்கும்.
வெள்ளரிக்காய்
வெள்ளரிக்காய் மிகவும் குளிர்ச்சித் தன்மைக் கொண்டது.
எனவே இதை கண்களுக்கு வைப்பது போல, வெள்ளரிக்காய் துண்டுகளை உதடுகளின் மேல் வைத்து 15 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
இதனால் வெள்ளரிக்காயில் உள்ள குளிர்ச்சித் தன்மை உதடுகளுக்கு ஈரப்பசையை அளித்து, உதடுகளில் உள்ள கருமையை நிறத்தினை மறையச் செய்து, இளஞ்சிவப்பு நிறத்தில் மென்மையான உதடுகளாக மாற்றுகிறது.
Related Posts :
- Back to Home »
- அழகுக்கு குறிப்புகள் »
- மென்மையான உதடுகள் வேண்டுமா? இதோ சூப்பர் டிப்ஸ்!

