Posted by : Author
Thursday, 27 October 2016
இந்த காலத்துல மேக்கப் போடாத பெண்ணுங்களையே பார்க்க முடியாது என பல ஆண்கள் சொல்லக் கேட்டிருப்போம்.
தாங்கள் அழகாக தெரிய வேண்டும் என்பதற்காக கண்ட கண்ட க்ரீம்களை வாங்கி பயன்படுத்துகிறோம்.
இதனால் பல்வேறான சருமப் பிரச்சனைகளும் ஏற்படுகின்றது, இதனை ஓரளவு தவிர்க்க உங்களுக்காக சில டிப்ஸ்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
முகம் கழுவுதல்
முகத்தில் ஏற்படும் எண்ணெய் பசை மற்றும் பொலிவற்ற தன்மையை போக்குவதற்கு மேக்கப் போடுவதற்கு முன்பு நன்றாக முகத்தை தண்ணீரில கழுவ வேண்டும்.
மாயிஸ்சரைஸ் செய்தல்
மாயிஸ்சரைசிங் மற்றும் சரும ஈரப்படுத்துதல் என்பது நீங்கள் போடும் மேக்கப் எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கும் ஒரு முக்கிய காரணியாகும்.
எனவே உங்களின் முகத்தை நன்கு மாயிஸ்சரைஸ் செய்வதால், இயற்கையாகவே மேக்கப் போட்ட இடத்தில் விரிசல்கள் ஏற்படாமல் பாதுகாக்கிறது.
மேக்கப்பை களைதல்
நாம் எப்போதும் உறங்கச் செல்வதற்கும் முன்பு மேக்கப்பை மறக்காமல் கலைத்து விட வேண்டும்.
ஏனெனில் நாம் போடும் மேக்கப் சருமத்தின் மீது அதிக நேரம் இருப்பதால், சரும வெடிப்புகள் மற்றும் பல்வேறு சருமப் பிரச்சனைகள் ஏற்படுவதற்கு வாய்ப்புகள் உள்ளது.
சீரம்
சீரம் எனப்படும் சரும ஊட்டச்சத்து மற்றும் முகப் பொலிவு எண்ணெயானது, நாம் மேக்கப் போடும் போது, நமது சருமத்திற்கு அதிக ஈரப்பசையை கொடுத்து, முகத்தை பொலிவுடன் வைக்கிறது.
கிரீம்கள்
நைட் கிரீம் என்பது நம் சருமத்தை ஒருநாள் முழுவதுமான மேக்கப் உள்ளிட்ட செயல்களினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து தடுக்கிறது.
மேலும் பகலில் போடும் க்ரீம்களில் அதிகமாக எஸ்பிஎஃப் இருக்கும் கிரீம்களை தேர்ந்தெடுக்க வேண்டும்.
ஏனெனில் சூரியக் கதிர்கள் மூலம் ஏற்படும் பாதிப்புகளை இந்த கிரீம்கள் தடுத்து விடுகிறது.
எக்ஸ்ஃபோலியேஷன்
மேக்கப் நன்கு பொலிவுடன் தெரிவதற்கு முதலில் சருமத்தில் உள்ள இறந்த செல்களை நீக்க வேண்டும்.
அதற்கு மேக்கப் போடுவதற்கு முன் நம் முகத்தில் எக்ஸ்ஃபோலியேஷன் செய்தால் முகமானது நல்ல பொலிவுடன் இருக்கும்.
கண் மைகள்
கண்ணிற்கு கீழே உள்ள பகுதி மிகவும் மென்மையான சருமப் பகுதியாக உள்ளது.
எனவே நாம் கண்களுக்கு மேக்கப் போடுவதற்கு முன்பு கண்களுக்கு அதிக ஈரப்பதத்தை அளிக்கும் ஐ கிரீம்களை பயன்படுத்திய பின்னர் மேக்கப்பை போட்டுக் கொள்ள வேண்டும்.
Related Posts :
- Back to Home »
- அழகு குறிப்புகள் »
- மேக்கப் போடும் போது இதெல்லாம் ஞாபகம் வச்சுக்கோங்க....

