Posted by : Author Friday, 21 October 2016


உலகில் எத்தனையோ ஆரோக்கியமான உணவுகள் உள்ளன. ஆனால் அந்த உணவுகள் அனைத்தும் நமக்கு நன்மையை மட்டும் தான் விளைவிக்கும் என்று நினைத்தால் அது தவறு. நாம் உண்ணும் ஒவ்வொரு உணவிலும் உயிருக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் ஒரு குறிப்பிட்ட ரசாயனங்கள் இருக்கிறது.

இந்த உணவுகளை தவறான முறையில் சாப்பிட்டால் தான், ஆபத்தை விளைக்கும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

உருளைக்கிழங்கு:

பெரும்பாலானோருக்கு பிடித்த உருளைக்கிழங்கு கூட ஆபத்தானவை தான். அதுவும் இந்த உருளைக்கிழங்கின் விஷமானது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும். உருளைக்கிழங்கு பச்சையாக இருந்தால், அதில் க்ளைக்கோ அல்கலாய்டு என்னும் விஷம் நிறைந்திருக்கும். அப்போது அதனை உட்கொண்டால், உடலின் சக்தியானது கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து, கோமா வரை கொண்டு செல்வதோடு, சில நேரங்களில் திடீரென்று இறப்பிற்கு வழிவகுக்கும்.

தக்காளி:

மற்றொரு ஆரோக்கியமான உணவுப் பொருள் தக்காளி. இதிலும் க்ளைகோ அல்கலாய்டு என்னும் விஷமிக்க கெமிக்கல் நிறைந்துள்ளது. அதுவும் இது தண்டு மற்றும் இலைகளில் தான் இருக்கும்.

ஒருவேளை அதன் தண்டு அல்லது இலையை சாப்பிட்டால், அது நரம்புதளர்ச்சியை உருவாக்குவதோடு, வயிற்று உப்புசத்தை அதிகரித்து இறுதியில் இறப்பை ஏற்படுத்திவிடும்.

ருபார்ப்:



இந்த மூலிகை இயற்கையாகவே அதிகப்படியான விஷத்தைக் கொண்டிருக்கும். பொதுவாக இதன் வேரை சாப்பிட்டால், மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும். ஆனால் இந்த மூலிகையின் இலையை சாப்பிட்டால், உடனே உயிர் போய்விடும்.

ஆப்பிள்:

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால், ஆரோக்கியமாக இருக்கலாம் என்று மருத்துவர்கள் சொல்வார்கள். ஆனால் அந்த ஆப்பிளின் விதையை சேர்த்து சாப்பிட்டால், வாழ்நாளின் எண்ணிக்கை தான் குறையும். ஏனெனில் ஆப்பிளின் விதையில் சையனைடு என்னும் ஆபத்தான விஷம் உள்ளது.

செர்ரி:



செர்ரிப் பழங்களில் இலை மற்றும் கொட்டைகளில் விஷத்தன்மை உள்ளது. அதுமட்டுமின்றி, அடுத்த முறை ப்ளம்ஸ், ஆப்ரிக்காட் மற்றும் பீச் போன்றவற்றை சாப்பிடும் போது, அதன் விதையை வாயில் போட்டு மெல்ல வேண்டாம்.

பாதாம்:

கசப்பு தன்மை கொண்ட பாதாமை சாப்பிட்டால், அதில் சையனைடு உள்ளது என்று அர்த்தம். ஆகவே பாதாமை பச்சையாக சாப்பிடுவதை விட, அதனை ஊற வைத்து அல்லது வறுத்து சாப்பிடுவது தான் சிறந்தது. இதனால் அதில் உள்ள விஷம் வெளியேறிவிடும்.

எல்டர்பெர்ரி (Elderberry):



எல்டர்பெர்ரி பழங்களானது உலகின் பல பகுதிகளில் உள்ள மக்கள் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் பழமாகும். ஆனால் இந்த எல்டர்பெர்ரி மரத்தின் வேரில் அதிகப்படியான விஷம் நிறைந்துள்ளது. அதிலும் இந்த விஷம் உடலில் சென்றால் வயிற்றில் பெரும் பிரச்சனையை உண்டு பண்ணி, உயிருக்கு ஆபத்தையே விளைவிக்கும்.

பஃப்பர் மீன் (Puffer Fish):

பஃப்பர் மீன் சாப்பிடுவதை தவிர்த்துவிடுங்கள். ஏனெனில் இந்த மீனின் கல்லீரலில் மிகவும் கொடிய விஷம் உள்ளது. இதனை ஈரலுடன் எண்ணெயில் போட்டு வறுத்து சாப்பிட்டால், அந்த விஷம் மீனில் பரவி, உயிருக்கே ஆபத்தை விளைவிக்கும்.

காளான்:
காளான் மிகவும் பிரபலமான மற்றும் சுவைமிக்க உணவுப் பொருள். இத்தகைய காளானில் நிறைய வெரைட்டிகள் உள்ளன. அதில் சில காளான்களில் விஷமானது அதிக அளவில் இயற்கையாகவே நிறைந்துள்ளது. ஆகவே காளான் வாங்கி சாப்பிடும் போது, சரியான காளானை தேர்ந்தெடுத்து சாப்பிடுங்கள். இல்லாவிட்டால், உயிரை விட நேரிடும்.









Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -