Posted by : Author
Wednesday, 14 September 2016
உடல் வலிமை பெறுவதற்கு எப்படி பல உடற்பயிற்சிகள் இருக்கின்றதோ, அதேபோல கண்களின் பார்வை கூர்மையாவதற்கும் ஒருசில பயிற்சிகள் இருக்கின்றன.
கண்களுக்கு தேவையான சத்தான உணவுகள் மற்றும் கண் பயிற்சிகள் போன்றவற்றை நாம் தினமும் கடைபிடித்து வந்தால், இளம் வயதில் உண்டாகும் பார்வையிழப்பை தவிர்த்து முதுமை காலத்திலும் நாம் கண் பார்வை கூர்மையுடன் இருக்கலாம்.
- முதலில் நாற்காலியில் நேராக அமர்ந்துக் கொண்டு தலையை அசைக்காமல் கண்களை வலமிருந்து இடமாகவும், பிறகு இடமிருந்து வலமாகவும் பார்க்க வேண்டும், இதேபோல் 8 முறை செய்ய வேண்டும்.
- அதனைத் தொடர்ந்து கண்களை மேலிருந்து கீழாகவும், பிறகு கீழிருந்து மேலாகவும் பார்க்க வேண்டும். இதையும் 8 முறை செய்ய வேண்டும்.
- அதன் பின் கண்களை கடிகார முள்களைப் போல வலமிருந்து இடமாகவும், இடமிருந்து வலமாகவும் 8 முறை சுழற்ற வேண்டும்.
- உங்களது கண்களுக்கு முன்னால் படுக்கை வசத்தில் 8 என்ற எண் வரைந்து வைத்துக் கொண்டு முதலில் வலமிருந்து இடமாக, இடமிருந்து வலமாக கண்களால் 8ஐ வரைவது போன்று பயிற்சியை செய்ய வேண்டும்.
- உங்களது கண்களுக்கு முன்னால் செங்குத்தாக 8 என்ற எண்ணை வரைந்துக் கொண்டு முதலில் மேலிருந்து கீழாகவும் பின் கீழிருந்து மேலாகவும் கண்களால் 8 ஐ வரைய வேண்டும்.
- வலது கண்ணின் மேல் கார்னரை உற்று நோக்க வேண்டும். பிறகு வலது கண்ணின் கீழ் கார்னரை பார்க்க வேண்டும். இதேபோல் 8 முறை செய்ய வேண்டும்.
- பின் நாற்காலியில் அமர்ந்தவாறே வலது உள்ளங்கையால் இடது கண்ணையும், இடது உள்ளங்கையால் வலது கண்ணையும் மென்மையாக அழுத்தம் கொடுக்காமல் கண்களை மூட வேண்டும். சில வினாடிகள் கழித்து மூடிய உள்ளங்கைகளை மெதுவாக கண்களை சிமிட்டிக் கொண்டே எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு பயிற்சி முடிவிலும் கண்களை சிமிட்டிக் கொள்ள வேண்டும். பயிற்சிகளை தினமும் ஒன்றிலிருந்து இரண்டு முறைகள் கடைபிடிக்கலாம்.
Related Posts :
- Back to Home »
- ஆரோக்கியத்தை சொல்லும் »
- தெளிவான பார்வைக்கு உதவும் சூப்பர் பயிற்சி....

