Posted by : Author Wednesday, 14 September 2016


முகத்தில் சில பேருக்கு பள்ளம் மேடாக இருக்கும். இதற்கு காரணம் உங்கள் சருமத்தில் உள்ள துளைகளானது விரிந்துக் கொண்டே போவதால், அந்த இடங்களில் அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் அதிகமாக சேர்கிறது.

இதனால் உங்களின் அழகான முகத்தில் பள்ளம், மேடுகள் உருவாகின்றன.

இவ்வாறு உருவாவதால், உங்களின் முக அழகையே கெடுக்கும் வகையில் உள்ளது.

  • சருமத்தை சுத்தப்படுத்த ஆவிப் பிடிப்பது ஒரு சிறந்த வழியாகும். ஆவி பிடிப்பதன் மூலம், சருமத்துளைகளில் உள்ள அழுக்குகள் மற்றும் எண்ணெய்கள் அனைத்தும் வெளியே வந்துவிடும். பின் சுத்தமான துணியால் துடைத்து எடுக்க வேண்டும்.
  • ஆவி பிடித்த பின், உப்பை நீரில் கலந்து அதனைக் கொண்டு மென்மையாக ஸ்கரப் முகத்தில் ஸ்கரப் செய்ய வேண்டும். இதனால் வெளியே வந்த அழுக்குகள் அனைத்தும் முற்றிலும் வெளியேற்றி விடுகிறது.
  • ஸ்கரப் செய்து முடித்தப்பின், ஐஸ் கட்டிகளைக் கொண்டு மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும். இதனால் திறந்துள்ள சருமத்துளைகளை மூடிக் கொண்டு அழுக்குகள் முகத்தில் படியாமல் தடுக்கிறது.
  • ஐஸ் கட்டிகளைக் கொண்டு மசாஜ் செய்து சிறிது நேரம் கழித்து, முகத்திற்கு மாய்ஸ்சுரைசர் பயன்படுத்தி மென்மையாக மசாஜ் செய்ய வேண்டும்.
  • நாம் முகத்தில் மேக்கப் போட்டிருந்தால், இரவில் படுக்கும் முன் ரோஸ் வாட்டர் பயன்படுத்தி துடைத்து எடுக்க வேண்டும். நீங்கள் மேக்கப் போடாமல் இருந்தால் முகத்தை நீரினால் ஒருமுறை கழுவ வேண்டும். இதனால் சருமத் துளைகளில் அழுக்குகள் சேர்வதைத் தவிர்க்கலாம்.
  • உங்களின் சருமத்திற்கு பொருந்தாத அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்துவதை தவிர்த்தால், உங்கள் சருமத் துளைகளை தோன்றுவது தடுக்கப்படும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -