Posted by : Author Thursday, 25 August 2016


நீர்ச்சத்து மற்றும் நார்ச்சத்து மிகுந்த ருசியான காய்களில் முதலிடம் வகிப்பது வெண்டைக்காய்.

உடலுக்கு தேவையான புரதம், நார்ச்சத்து, நீர்ச்சத்து, இரும்புச்சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் மிகுந்து காணப்படுகின்றன.

பெண்களுக்கு மாதவிலக்கின் போது அதிக உஷ்ணத்தினால் ஏற்படும் வயிற்று வலி நீங்க, பிஞ்சு வெண்டைக்காய் விதைகளை 2 முதல் 5 கிராம் சாப்பிட்டு வர வேண்டும்.
  • வெண்டைக்காயில் வேதிச்சத்துகள் இருப்பதால், ரத்தம் உறைதல் மட்டும் ரத்தகட்டிகள் வராமல் தடுக்கிறது.
  • வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதால் மூளைச் செயலிழப்பு சார்ந்த நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.
  • வெண்டைக்காய் பிஞ்சுக்களை மோர் குழம்பு செய்து சாப்பிட்டால் காய்ச்சல், மலச்சிக்கல் நீங்கும்.
  • வெண்டைக்காய் சாறுடன் சிறிது சர்க்கரை சேர்த்து சாப்பிட்டால் இருமல், நீர்க்கடுப்பு போன்றவை குணமாகும்.
  • வெண்டைக்காயை பொடிப் பொடியாக நறுக்கி, வதக்கி தினமும் சாப்பிட்டு வந்தால், படுக்கும் குழந்தைகளுக்கு நினைவாற்றல் மற்றும் சரியாக கணக்கு போடும் ஆற்றல் அதிகரிக்கும்.
  • பெக்டின் என்னும் நார்ப்பொருள் வெண்டைக்காயில் இருப்பதால், உடலில் உள்ள கெட்ட கொழுப்புகளை கரைத்து உடல் பருமனை குறைக்கும் வேலையை கச்சிதமாக செய்கிறது.
  • வெண்டைக்காயின் வேரை காயவைத்து பொடியாக்கி அதை பாலுடன் சேர்த்து குடித்து வந்தால், ஆண்களின் ஆண்மை பெருகும்.
  • வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்துக் கொண்டால், பொலிவான முக அழகினைப் தருகிறது.
வெண்டைக்காயை தினமும் உணவில் சேர்த்து அதிக அளவில் உட்கொண்டால், குடல்புண் மற்றும் தோலில் ஏற்படும் வறட்சி தன்மையை நீக்குகிறது.
 



Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -