Posted by : Author Monday, 29 August 2016


தலைமுடியின் வேர்கால்களில் சுரக்கப்படும் அதிகப்படியான எண்ணெயே பிசுபிசுப்பான கூந்தலுக்கு காரணம். செபேஷியஸ் சுரப்பிகளின் தூண்டலே இதற்குக் காரணம். செபேஷியஸ் சுரப்பி சுரக்கும் எண்ணெய் கூந்தலை வெளிப்புற மாசிலிருந்தும் தொற்றுக்களிலிருந்தும் பாதுகாக்கும். அதுவே அளவுக்கதிகமாக இந்த எண்ணெய் சுரந்தால், கூந்தலில் பிசுபிசுப்பான நிலையை கொண்டு தரும். இதனால் பொடுகு, அரிப்பு, முடி உதிர்தல் ஆகியவை அதிகமாக ஏற்படும்.

எண்ணெய் பசைக் கூந்தலுக்கான ஷாம்பு உபயோகித்து வாரம் 3 முறை கூந்தலை அலச வேண்டும். உங்கள் கூந்தல் ரொம்பவும் எண்ணெய் பசையுடன் இல்லை என்றால், ஷாம்பு குளியலுக்குப் பிறகு மிதமான கண்டிஷனர் உபயோகிக்கலாம்.

கூந்தலுக்கு எண்ணெய் வைக்கக் கூடாது. இவை கூந்தலை பலவீனமாக்கும். முடியை வேகமாய் உதிரச் செய்யும். அதேபோல் அதிகமாய் கூந்தலை சீவுதல் கூடாது. அது எண்ணெய் சுரப்பிகளைத் தூண்டி, எண்ணெய் சுரப்பை அதிகப்படுத்தும்.

தினசரி உபயோகத்துக்கேற்ற வகையில் மைல்டான ஷாம்புவாக தேர்ந்தெடுக்கவும்.

நீரில் கால் கப் ஓட்ஸை போட்டு 5 நிமிடங்கள் கொதிக்க வைக்கபும். ஆறியபின் வடிகட்டி அந்த நீரை தலையில் தடவுங்கள். 15 நிமிடங்கள் கழித்து, தலையை அலசவும். இவ்வாறு செய்தால், அதிகப்படியான எண்ணெய் சுரப்பது குறையும்.

15 நாட்களுக்கொரு ஒருமுறை தலைக்கு ஹென்னா உபயோகிப்பதும், அதிகப்படியான எண்ணெய் பசையைக் கட்டுப்படுத்தும். அதே போல் அதிகப்படியான எண்ணெய் கூந்தலில் சுரந்தால் எலுமிச்சை சாறினை தலையில் தேய்த்து அலசினாலும் கட்டுப்படும்.

எண்ணெயில் பொரித்த, வறுத்த உணவுகளுக்கும், பதப்படுத்தப்பட்ட உணவுகளுக்கும் இடம் அளிக்காதீர்கள். தினசரி உணவில் நிறைய பழங்களும் காய்கறிகளும் எடுத்துக் கொள்ளுங்கள். உலர்ந்த திராட்சை, பாதாம், பெர்ரி மற்றும் நிறைய பழ ஜூஸ் சேர்த்துக் கொள்ளவும்.

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -