Posted by : Author Tuesday, 2 August 2016


முழு உடல் பரிசோதனை என்றால்,
என்னென்ன பரிசோதனைகள் எல்லாம் செய்வார்கள்?


பொதுவாக, முழு உடல் பரிசோதனையில் மார்புப் பகுதி எக்ஸ்ரே, ஈசிஜி, சாப்பிடுவதற்கு முன்பு ரத்தத்தில் சர்க்கரை அளவு, மொத்த கொழுப்பு அளவு, ரத்தத்தில் ஹீமோகுளோபின், ரத்த அணுக்கள் உள்ளிட்டவற்றின் அளவு, ரத்த அழுத்த பரிசோதனை, கல்லீரல், மண்ணீரல், கணையம், சிறுநீரகத்தின் செயல்பாடு ஆகியவற்றைக் கண்டறிய அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன் எனத் தொடர் பரிசோதனைகள் நடக்கும். ரத்தசோகை உள்ளதா? அப்படி இருந்தால் எதனால் ரத்தசோகை ஏற்பட்டது என்பதை ரத்தப் பரிசோதனை மூலமே தெரிந்துகொள்ளலாம். அல்ட்ரா சவுண்ட் பரிசோதனை மூலம் கல்லீரலில் பாதிப்பு உள்ளதா, பித்தப் பை மற்றும் சிறுநீரகத்தில் கல் உள்ளதா, அல்லது வேறு ஏதேனும் பிரச்னை உள்ளதா என்பதையும் தெரிந்துகொள்ளலாம் பெண்களுக்குக் கருப்பை மற்றும் கருமுட்டைப் பையில் பிரச்னை உள்ளதா என்று பார்க்கப்படும் பிரச்னை இருப்பது தெரியவந்தால், அவர்களுக்குத் தீவிரச் சிகிச்சைக்குப் பரிந்துரைப்பார்கள்''.

முழு உடல் பரிசோதனை வகைகள்:
பொதுவாகச் செய்யப்படும் முழு உடல் பரிசோதனையுடன் ஒவ்வோர் உறுப்புக்கு எனப் பிரத்யேகமாகச் சில கூடுதல் பரிசோதனைகளையும் செய்துகொள்ளலாம். இந்தப் பரிசோதனைகளைத் தனியாகவோ முழு உடல் பரிசோதனையுடன் இணைந்தோ செய்துகொள்ளலாம். இவை அவரவர் விருப்பத்துக்கு உட்பட்டது. இதன்படி முன்னணி மருத்துவமனைகள் இதயம், நுரையீரல், பக்கவாதம், மூட்டு வலி, கல்லீரல் செயல்பாடு, சிறுநீரகச் செயல்பாடு எனப் பிரத்யேகப் பரிசோதனைகளையும் வழங்குகின்றன. இதற்கான கட்டணம் மருத்துவமனைக்கு மருத்துவமனை மாறுபடும். பொதுவாக அரசு மருத்துவமனையில் ரூ.250-க்கு முழு உடல் பரிசோதனை செய்யப்படுகிறது. தனியார் மருத்துவமனைகளில் அடிப்படை மருத்துவ பரிசோதனை ரூ.800-ல் தொடங்கி சில ஆயிரங்கள் வரை வாங்குகிறார்கள்.

முழு உடல் பரிசோதனை செய்பவர்கள் கவனத்துக்கு:
குடல் மாதிரியான உள்ளே வெற்றிடம்கொண்ட உறுப்புகள் எப்படி இருக்கின்றன என்பதை ஸ்கேன் செய்து கண்டறிய முடியாது. அதற்கு என்டோஸ்கோபி போன்ற கருவியை உள்ளே செலுத்தித்தான் பார்க்க முடியும். ஏதேனும் ஒரு நோய் அறிகுறி இருந்தால், சம்பந்தப்பட்ட துறை மருத்துவரிடம் ஆலோசனைப் பெற்று அதன் பிறகு நோய் கண்டறிதலுக்கு உட்படுவது நல்லது. அதைவிடுத்து, முழு உடல் பரிசோதனை செய்துகொண்டேன். ஆனால், எனக்கு ஒன்றும் இல்லை என்று கூறுவது சரி இல்லை.
காலையில் சாப்பிடாமல் வர வேண்டும். வேண்டுமானால், தண்ணீர் குடித்துக்கொள்ளலாம். சாப்பிடாமல் வர வேண்டும் என்பதற்காக முந்தைய நாள் மதியத்தில் இருந்து சாப்பிடாமல் இருப்பது எல்லாம் கூடாது. குறைந்தது 8 முதல் 10 மணி நேரத்துக்கு முன் சாப்பிட்டிருக்க வேண்டும். அப்போதுத£ன் ரத்தத்தில் சர்க்கரை அளவு எவ்வளவு உள்ளது என்பதைச் சரியாகக் கணக்கிட முடியும். டாக்டர்கள் கேட்கும் கேள்விக்கு மறைக்காமல் பதில் சொல்ல வேண்டும்..
பெண்களுக்கு மார்பகப் புற்றுநோயைக் கண்டறிய மேமோகிராம் பரிசோதனை செய்யப்படும். முழு உடல் பரிசோதனையுடன் முதியவர்களுக்கு குடல் புற்றுநோயைக் கண்டறியும் ஸ்டூல் உள்ளிட்ட பரிசோதனை செய்யப்படும். ஆண்களுக்கு, விந்துச் சுரப்பியின் செயல்பாட்டைக் கண்டறிய பிரத்யேகப் பரிசோதனை செய்யப்படும்
மருத்துவர் கேட்கும் கேள்விகளுக்கு மறைக்காமல் பதில் சொல்லவேண்டும். உங்களுக்கு உள்ள பிரசனைகள், எதாவது வலிகள் உள்ளனவா என்பதையும் மறக்காமல் சொல்லவேண்டும்.
அவர்கள் கூரும் அறிவுரைகளை கடைபிடித்து,நோய் வருமுன் காப்போம் நண்பர்களே!

Leave a Reply

Subscribe to Posts | Subscribe to Comments

Welcome to My Blog

- Copyright © மருத்துவம் -New Mannar- Powered by New Mannar - Designed by New Mannar -